Moto 360 3rd Gen புதிய ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் விலையில் இந்தியாவில் அறிமுகம்.

HIGHLIGHTS

மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமானது.

புதிய மோட்டோ 360 மாடல் விலை ரூ. 19,990 ஆகும்

இந்த ஸ்மார்ட்வாட்ச் பேண்டம் பிளாக், ஸ்டீல் கிரே மற்றும் ரோஸ் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது

Moto  360 3rd Gen புதிய ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் விலையில் இந்தியாவில் அறிமுகம்.

மோட்டோரோலா நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமானது. முன்னதாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மே மாத இறுதியில் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டது. எனினும், தற்போது தான் இதன் விற்பனை துவங்கி இருக்கிறது. 
 
புதிய மோட்டோ 360 மாடல் விலை ரூ. 19,990 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் பேண்டம் பிளாக், ஸ்டீல் கிரே மற்றும் ரோஸ் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டோ 360 மாடலில் 1.2 இன்ச் வட்ட வடிவ AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கூகுள் வியர் ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் 355 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 4.1, சிங்கில் பேண்ட் வைபை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் கேஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் PVD கோட்டிங் (ஸ்டீல் கிரே, ரோஸ் கோல்டு) அல்லது DLC கோட்டிங் (பேண்டம் பிளாக்) செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo