7000Mah பேட்டரியுடன் OPPO K14 5G இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Oppo அதன் புதிய OPPO K14 5G போன் இந்த வாரம் அறிமுகம் செய்தது

இன்று முதல் முறையாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

இந்த போனில் அறிமுக சலுகையாக ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

7000Mah பேட்டரியுடன் OPPO K14 5G இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்

Oppo அதன் புதிய OPPO K14 5G போன் இந்த வாரம் அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து இன்று முதல் முறையாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனில் அறிமுக சலுகையாக ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் 7000Mah பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் முழு தகவலை பாருங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OPPO K14 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

Oppo K14 sale போன் மார்ச் 20 தேதியான இன்று இந்த போன் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, ஓப்போ K14, 6GB + 128GB கொண்ட அடிப்படை வேரியண்ட்டிற்கு ரூ. 17,999 என்ற விலையிலும், 6GB + 256GB வேரியண்ட்டிற்கு ரூ. 19,999 என்ற விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், 8GB ரேம் மற்றும் 256GB கொண்ட உயர்நிலை வேரியண்ட்டின் விலை ரூ. 21,999 ஆகும். ஆனால் இந்த போனில் அறிமுக சலுகையாக HDFC, ICICI மற்றும் SBI பேங்க் கார்டில் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனின் ஆரம்ப வேரியண்டை ரூ,16,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பல டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

OPPO K14 5G சிறப்பம்சம்.

Oppo K14 5G ஸ்மார்ட்போன் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் கூடிய 6.75-இன்ச் ஸ்க்ரீன். நிறுவனத்தின் கூற்றுப்படி, நேரடி சூரிய ஒளியில் இந்தத் ஸ்க்ரீன் 1,125 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச ப்ரைட்னஸ் அடைய முடியும். டஸ்ட் மற்றும் வாட்டர் பாதுகாக்க, இந்தச் போன் IP66, IP68 மற்றும் IP69 சான்றிதழ்களுடன் வருகிறது.

இதையும் படிங்க:7000Mah பேட்டரியுடன் Realme P4 Lite 5G அறிமுகம், விலை அம்சங்கள் பாருங்க

மேலும் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek Dimensity 6300 ப்ரோசெசருடன் ColorOS 15 அடிபடையின் கீழ் Android 15 யில் இயங்குகிறது.

கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, இந்தச் சாதனத்தில் 50MP பிரதான கேமரா, 2MP மோனோக்ரோம் சென்சார் மற்றும் செல்ஃபிகள், வீடியோ அழைப்புகளுக்காக 8MP முன்பக்க கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் AI அடிப்படையிலான போட்டோ அம்சங்களும் உள்ளன.

கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் 7000mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் நன்மை வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனை Icy Blue, Prism Violet, மற்றும் Prism White கலரில் வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo