7000Mah பேட்டரியுடன் Realme P4 Lite 5G அறிமுகம், விலை அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Realme இன்று இந்தியாவில் அதன் realme P4 Lite 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த போனில் அதிகபட்சமாக 7000Mah பேட்டரியும் வழங்கப்படுகிறது

இந்த போனின் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்ரூ.12,999-யில் இருந்து தொடங்குகிறது.

7000Mah பேட்டரியுடன் Realme P4 Lite 5G அறிமுகம், விலை அம்சங்கள் பாருங்க

Realme இன்று இந்தியாவில் அதன் realme P4 Lite 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது, இந்த போனில் அதிகபட்சமாக 7000Mah பேட்டரியும் மற்றும் இந்த போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 5ஜி சிப்செட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் விலை மற்றும் அம்சங்களின் தகவலை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme P4 Lite 5G விலை தகவல்

இந்தியாவில் Realme P4 Lite 5G-யின் விலை, 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட அடிப்படை மாடலுக்கு ரூ. 12,999-யில் இருந்து தொடங்குகிறது. இது 4GB + 128GB மற்றும் 6GB + 128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உள்ளமைவுகளிலும் கிடைக்கிறது, அவற்றின் விலை முறையே ரூ. 13,999 மற்றும் ரூ. 15,999 ஆகும் .

இந்தக் போனில்  Mosaic Blue மற்றும் Mosaic Green ஆகிய கலர்களில் தேர்வுகளில் கிடைக்கிறது. இதை ஃபிளிப்கார்ட், ரியல்மி இந்தியா வெப்சைட் மற்றும் நாடு முழுவதும் உள்ள ரீடைளர் விற்பனைக் கடைகள் மூலம் வாங்கலாம்.

அறிமுகச் சலுகைகளின் ஒரு பகுதியாக, கஸ்டமர்கள் ரூ. 1,000 தள்ளுபடியைப் பெறலாம். மேலும், ரூ. 500 மதிப்புள்ள பேங்க் சலுகையும் உள்ளது. ஏற்கனவே உள்ள ரியல்மி பயனர்கள் கூடுதலாக ரூ 500 எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கும் தகுதி பெறலாம்

Realme P4 Lite 5G சிறப்பம்சம்.

இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.8-இன்ச் எச்டி+ (720 x 1,570 பிக்சல்கள்) LCD ஸ்க்ரீன் உள்ளது. இது 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 900 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசம் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க Motorola பிரியர்களுக்கு குட் நியூஸ் ஒரே நேரத்தில் இந்த மூன்று போன்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட்

ரியல்மி பி4 லைட் 5ஜி, மீடியாடெக் டிமென்சிட்டி 6300 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் இந்த போனில் ஏர்ஃப்ளோ வேப்பர் சேம்பர் பொருத்தப்பட்டுள்ளது. இதை தவிர இந்த போனில் டூயல்-சிம் (நானோ + நானோ) கொண்ட ரியல்மி பி4 லைட் 5ஜி, ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ரியல்மி யுஐ 7.0-ல் இயங்குகிறது. இதற்கு இரண்டு வருட ஓஎஸ் அப்டேட்களும், மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் f/2.2 துளை கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா முக்கிய அம்சமாக விளங்குகிறது. இந்த போனில் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரியல்மி கைப்பேசியில் உள்ள இணைப்பு வசதிகளில் 5G, 4G LTE, Wi-Fi 5, ப்ளூடூத் 5.3, 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.

ரியல்மி பி4 லைட் 5ஜி, 15W வயர்டு சார்ஜிங் வசதியுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த கைபேசி 166.3 x 78.1 x 8.4 mm அளவைக் கொண்டுள்ளது மற்றும் இதன் எடை சுமார் 212 கிராம் ஆகும

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo