EPFO யின் புதிய ரூல் இனி UAN எக்டிவேட் செய்வது ரொம்ப ரொம்ப ஈசியாக இருக்கும்
டிஜிட்டல் இந்தியா உலகத்தில் இப்பொழுது EPFO அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதியான யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (UAN) உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் UMANG ஆப்பை EPFO கட்டாயமாக்கியுள்ளது. இந்த புதிய விதி, செயல்முறையை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற ஆதார் அடிப்படையிலான பேஸ் அதேண்டிகேஷன் டெக்னாலஜி (FAT) பயன்படுத்துகிறது. அதிகாரப்பூர்வ ரிப்போர்டின் படி , இப்போது அனைத்து புதிய UAN ஒதுக்கீடுகளும் FAT ஐப் பயன்படுத்தி UMANG ஆப் மூலம் மட்டுமே செய்யப்படும். தடைகளை நீக்கவும், EPFO-வின் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள மெம்பர்களுக்கு சிறந்த ஆன்போர்டிங்கை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் இதை பற்றி முழு தகவல் பெறலாம்.
SurveyUAN என்றால் என்ன?
UAN என்பது 12 இலக்கு கொண்ட யூனிபைட் அக்கவுண்ட் நம்பர் ஆகும். அதாவது இந்த எண் ஒவ்வொரு நபருக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் தனித்தனியாக வழங்கப்படுகிறது. இது வேலை மாறினாலும் மாறாத ஒரு நிரந்தர அடையாளமாகும். ஒரு பணியாளரின் அனைத்து PF அக்கவுன்ட் நம்பர்களையும் இந்த UAN உடன் இணைக்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், ஒரு ஊழியர் ஒரு புதிய நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கும்போது, அந்த புதிய நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட PF அக்கவுண்ட் அதே UAN உடன் இணைக்கப்படும், இதனால் ஊழியர் தனது அனைத்து PF அக்கவுண்ட்களையும் ஒரே இடத்தில் நிர்வகிக்க முடியும். பேலன்ஸ் சரிபார்ப்பது, பாஸ்புக்கைப் டவுன்லோட் மற்றும் UAN மூலம் பணம் எடுப்பது எளிதாகிறது
இந்த புதிய சிஸ்டத்தின் நன்மை என்ன?
இந்த புதிய சிஸ்டமின் கீழ் இதன் நன்மையை பற்றி பேசினால் , இப்பொழுது நீங்கள் எந்த ஒரு வேலையில் சேர்ந்தாலும் அல்லது வேலையில் மாறினாலும் UAN நம்பர் பெற HR அல்லது யாருடைய களையும் பிக்க தேவை இல்லை , நீங்கள் ஆதார் அடிபடையிலான பேஸ் அதேண்டிகேஷன் கீழ் எந்த ஒரு செயல்முறையும் எளிதாக செய்ய முடியும், இதன் மூலம் ஊழியர் EPFO யின் அனைத்து சேவையும் அதிவேகமாக பெற முடியும் அதாவது இதில் பாஸ்புக் பார்ப்பது, KYC அப்டேட் மற்றும் க்ளைம் ஸ்டேட்டஸ் மற்றும் தங்களின் போட்டோ மற்றும் முகவரி சரி பார்ப்பது போன்ற அனைத்து தகவலையும் பெறலாம்.
இதையும் படிங்க:PF அக்கவுண்டில் பிரச்சனை அல்லது குழப்பமா இந்த ஒரு அரசு தளம் உங்களின் அனைத்து கேள்விக்கும் பதில்
இதை எப்படி செய்வது முழு செயல்முறையை பார்க்கலாம் வாங்க.
- UMANG மற்றும் Aadhaar Face RD App ஆப் டவுன்லோட் செய்யவும்.
- UAN Allotment and Activation” யில் செல்லவும்.
- உங்களின் ஆதார் மற்றும் மொபைல் நம்பர் போடவும்.
- OTP அனுப்பி மற்றும் Aadhaar Face RD App யின் உதவியால் பேஸ் ஸ்கேன் செய்து அதேடிகேஷன் பூர்த்தி செய்யலாம்.
- ஒருவேளை உங்களுக்கு UAN யில் எந்த லிங்க் இல்லை என்றால் UAN உருவாகி SMS அனுப்பப்படும்.
ஏற்கனவே இருக்கும் UAN எக்டிவேட் செய்வது எப்படி?
- UMANG ஆப்யில் சென்று “UAN Activation” யில் தட்டவும்.
- உங்களின் UAN, ஆதார் நம்பர் மற்றும் மொபைல் நம்பர் போடவும்.
- OTP அனுப்பி பேஸ் ஸ்கேன் வெரிபிகேஷன் செய்யவும்
- எக்டிவேஷன் செய்த பிறகு SMS மூலம் ஒரு தற்காலிக பாஸ்வர்ட் பெருவிர்கள்
- அதன் பிறகு அந்த பாஸ்வர்ட் போட்டு உங்களின் UAN அக்கவுன்ட் எக்டிவேட் செய்யலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile