போட், ஏர்டோப்ஸ் 621 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது
புது இயர்பட்ஸ் 150 மணி நேர பேக்கப், ப்ளூடூத் 5, வாட்டர் ரெசிஸ்டண்ட் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. புது இயர்பட்ஸ் 150 மணி நேர பேக்கப், ப்ளூடூத் 5, வாட்டர் ரெசிஸ்டண்ட் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி மின்சாதன அக்சஸரீ பிராண்டான போட், ஏர்டோப்ஸ் 621 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புது இயர்பட்ஸ் 150 மணி நேர பேக்கப், ப்ளூடூத் 5, வாட்டர் ரெசிஸ்டண்ட் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் போட் ஏர்டோப்ஸ் 621 மாடல் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான் தளத்தில் கிடைக்கிறது.
ஏர்டோப்ஸ் 621 மாடலில் போட் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க சவுண்ட், 6எம்எம் டிரைவர்கள் உள்ளன. இத்துடன் புது இயர்பட்ஸ் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் மாடலின் மிகமுக்கிய அம்சமாக அதன் பேட்டரி பேக்கப் உள்ளது.
புதிய போட் ஏர்டோப்ஸ் 621 ஒவ்வொரு இயர்பட் 35 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இது 5.5 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். மேலும் இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் 2600 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இது பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது ஐந்து நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் பயன்படுத்த முடியும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile