வெறும் காற்று மூலம் சார்ஜ் புதிய டெக்னோலஜி அறிமுகம் செய்த Xiaomi

HIGHLIGHTS

காற்றுவாக்கில் சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை சியோமி அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்பம் எம்ஐ ஏர் சார்ஜ் என அழைக்கப்படுகிறது

வெறும் காற்று மூலம் சார்ஜ் புதிய டெக்னோலஜி அறிமுகம் செய்த Xiaomi

சாதனங்களுக்கு காற்றுவாக்கில் சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை சியோமி அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்பம் எம்ஐ ஏர் சார்ஜ் என அழைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் பல்வேறு சாதனங்களை கேபிள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டு இன்றி சார்ஜ் செய்யும். 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தற்போதைய அறிவிப்பின் படி இந்த தொழில்நுட்பம் எவ்வித மாற்றமும் இன்றி வர்த்தக ரீதியில் வழங்கப்பட்டால், அறையினுள் பயனர் சாதனத்தை பயன்படுத்தும் போதே அவற்றுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். இது சியோமி நிறுவனத்தின் புதுவித சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகும்.

புதிய எம்ஐ ஏர் சார்ஜ் தொழில்நுட்பம் எந்த சாதனத்தையும் 5W திறன் கொண்டு சார்ஜ் செய்யும் வசதி கொண்டுள்ளது. மேலும் இது இரண்டு மீட்டர்களுக்குள் இருக்கும் சாதனங்களை சார்ஜ் செய்யும். இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தி பல்வேறு சாதனங்களை ஒரே சமயத்தில் சார்ஜ் செய்ய முடியும்.

முதற்கட்டமாக இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்மார்ட்வாட்ச், இதர அணியக்கூடிய சாதனங்கள், ஸ்பீக்கர்கள், சிறிய வீட்டு சாதனங்கள் உள்ளிட்டவைகளுக்கும் இந்த தொழில்நுட்பம் வழங்கப்படலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo