Samsung Galaxy xCover 5 டிஃபென்ஸ் லெவல் செக்யூரிட்டி அம்சத்துடன் அறிமுகம்.
கேலக்ஸி எக்ஸ்கவர் 5 மாடலில் ஷாக்-ரெசிஸ்டண்ட் ரக்கட் எக்ஸ்டீரியர் கொண்டுள்ளது
இந்த போன் ஐபி 68 ரேட்டிங்குடன் வருகிறது
போனில் க்ளோவ்-டச் வசதியும் உள்ளது
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ரக்கட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிக கடுமையான பணிச்சூழல்களில் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டு உள்ளது. இது 2016 ஆம் ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ7 ஆக்டிவ் ஸ்மார்ட்போனை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் ரக்கட் மாடல் ஆகும்.
Surveyசாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 சிறப்பம்சங்கள்
– 5.3 இன்ச் 1480×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர்
– மாலி-G52
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1
– டூயல் சிம்
– 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
– 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– அமெரிக்கா ராணுவ தரம் MIL-STD 810G
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 3000 எம்ஏஹெச் பேட்டரி
– 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
கேலக்ஸி எக்ஸ்கவர் 5 மாடலில் ஷாக்-ரெசிஸ்டண்ட் ரக்கட் எக்ஸ்டீரியர் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் 1.5 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே கையுறை அணிந்தும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போனின் விலை 329 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 33,245 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்சமயம் இது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் இது ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்கா சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile