Samsung Galaxy S20 FE 5G, அசத்தலான மொபைல் போன் அறிமுகம்.

HIGHLIGHTS

சாம்சங் கேலக்ஸி S20 FE 5G வேரியண்ட் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது

இதன் 5ஜி வெர்ஷனும் இதேபோன்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

Samsung Galaxy S20 FE 5G, அசத்தலான மொபைல்  போன் அறிமுகம்.

புதிய அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி S20 FE 5G வேரியண்ட் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். சாம்சங் கேலக்ஸி S20 FE 5G ஜி யை அமெரிக்காவிலும் பிற பிராந்தியங்களிலும் செப்டம்பர் 2020 இல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC உடன் அறிமுகப்படுத்தியது. 4 ஜி மாறுபாடு 2020 அக்டோபரில் எக்ஸினோஸ் 990 SoC உடன் மீண்டும் இந்தியாவில் இடம் பிடித்தது, ஆனால் 5 ஜி மாறுபாடு எப்போது வரும் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. கூடுதலாக, 5 ஜி மாறுபாடு சில பகுதிகளில் புதிய புதுப்பிப்பைப் பெற்றுள்ளது, இது சில கேலக்ஸி எஸ் 21 கேமரா அம்சங்களுடன் பல புதுப்பிப்புகளைக் கொண்டுவருகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 990 பிராசஸருடன் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருந்தது. 

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலின் 5ஜி வேரியண்டை ஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்20 எப்இ 4ஜி மாடல் ரூ. 49,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 5ஜி வெர்ஷனும் இதேபோன்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 4ஜி வேரியண்டில் வழங்கப்பட்டதை போன்றே 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED, இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே, ஆப்டிக்கல் கைரேகை சென்சார், 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் சார்ஜர், வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர் ஷேர் வசதி வழங்கப்படலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo