கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் புதிய ஸ்மார்ட்போனை Samsung Galaxy S20 FE 4G உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ரோசெசர் மூலம் இயங்கும் இந்த சாதனம் AMOLED டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் வழங்கப்படுகிறது. முன்னதாக, கேலக்ஸி எஸ் 20 எஃப்இயின் 5 ஜி மாறுபாட்டையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
SAMSUNG GALAXY S20 FE 4G: சிறப்பம்சம்.
Samsung Galaxy S20 FE 4G யில் 6.5 இன்ச் FHD + Super AMOLED Infinity O டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது, இது 120Hz இன் அப்டேட் வீதத்தைக் கொண்டுள்ளது. டிஸ்பிளேயில் ஒரு பஞ்ச்-ஹோல் கட்அவுட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது.
கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த சாதனம் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 12MP அல்ட்ரா -வைட் என்கில் லென்ஸ், 12MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 8MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இது தவிர, போனில் முன்புறத்தில் 32 எம்.பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 4 ஜி 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. தொலைபேசியில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் வைஃபை, 5 ஜி, 4 ஜி எல்டிஇ, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 4 ஜி விலை பற்றி பேசுகையில், இது 630 யூரோவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது சுமார் 57,100 ரூபாய்.ஆகும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile