Samsung Galaxy A52 மற்றும் A72 மார்ச் 17 அறிமுகமாகும்.
சாம்சங் கேலக்ஸி ஏ 52 மற்றும் ஏ 72 அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும்
Galaxy Awesome Unpacked நிகழ்வுக்கான அழைப்புகளை அனுப்பத் தொடங்கியுள்ளது
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 32 மெகாபிக்சல் முன் கேமரா கிடைக்கும்
Samsung Galaxy A52 மற்றும் Samsung Galaxy A72 ஆகியவை கடந்த சில நாட்களாக செய்திகளில் வந்துள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் மார்ச் மாதத்தில் நிறுவனம் அறிமுகப்படுத்த முடியும் என்று சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டது. இதற்கிடையில், இப்போது சாம்சங் மார்ச் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் Galaxy Awesome Unpacked நிகழ்வுக்கான அழைப்புகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. அழைப்புகள் என்பதால், கேலக்ஸி ஏ 52 மற்றும் ஏ 72 இன் என்ட்ரி மார்ச் 17 அன்று இருக்கும் என்று இப்போது நம்பப்படுகிறது.
Surveyஇந்த விழாவில் கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
The moment of awesome we’ve all been waiting for: Unpacked, March 17, 2021. #SamsungUnpacked pic.twitter.com/SvzP7ugttO
— Samsung Mobile (@SamsungMobile) March 9, 2021
இரு ஸ்மார்ட்போன்களும் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி ஏ72 மாடலில் 6.7 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 5ஜி வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி ஏ52 மாடலில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 5ஜி வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile