48MP குவாட் ரியர் கேமரா கொண்ட Oppo F19 Pro மற்றும் Oppo F19 Pro+ ஸ்மார்ட்போன் அறிமுகம்.
ஒப்போ எஃப் 19 புரோ + மற்றும் ஒப்போ எஃப் 19 ப்ரோ விற்பனை மார்ச் 17 முதல் தொடங்கும்
ஒப்போ எஃப் 19 புரோ சீரிஸ் போன்கள் ப்ரீ ஆர்டருக்கு கிடைக்கின்றன
ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஒப்போ தனது சமீபத்திய ஒப்போ F 19 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரின் கீழ், ஒப்போ எஃப் 19 புரோ + மற்றும் ஒப்போ எஃப் 19 புரோ ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.முக்கியமான அம்சங்களைப் பற்றி பேசுகையில், குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புரோ பிளஸ் வேரியண்டில், வாடிக்கையாளர்களுக்கு 5 ஜி இணைப்பு ஆதரவு கிடைக்கும், மறுபுறம் புரோ மாடலின் 4 ஜி மாறுபாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Surveyஒப்போ எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி விலை தகவல்
ஒப்போ எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்கள் புளூயிட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் சில்வர் நிறங்களில் கிடைக்கின்றன. ஒப்போ எப்19 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,490 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 23,490 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஒப்போ எப்19 ப்ரோ பிளஸ் மாடலின் விலை ரூ. 25,990 ஆகும்.
ஒப்போ எப்19 மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் சிறப்பம்சம்
ஒப்போ நிறுவனம் எப்19 மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் . இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளன.
புதிய எப்19 ப்ரோ மாடலில் மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் கொண்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர்ஒஎஸ் 11.1 வழங்கப்பட்டு இருக்கின்றன.
இரு மாடல்களிலும் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் ப்ரோ பிளஸ் மாடலில் போர்டிரெயிட் வீடியோ மற்றும் அல்ட்ரா நைட் வீடியோ அல்காரிதம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 4310 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 50 வாட் பிளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலுடன் 65 வாட் சார்ஜரும், எப்19 ப்ரோ மாடலுடன் 30 வாட் வூக் பிளாஷ் சார்ஜரும் வழங்கப்படுகின்றன
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile