அசத்தலான கேமரா மற்றும் 5000Mah பேட்டரியுடன் Oppo F19 ஸ்மார்ட்போன் அறிமுகமானது.

HIGHLIGHTS

OPPO F19 இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

OPPO F19 க்கு 33W வேகமான சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது

Oppo F19 ஸ்மார்ட்போன் ப்ரிசம் பிளாக் மற்றும் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது

அசத்தலான கேமரா மற்றும் 5000Mah  பேட்டரியுடன் Oppo F19 ஸ்மார்ட்போன் அறிமுகமானது.

OPPO F19 இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய மாடல் OPPO F19 சீரிஸில்  வந்துள்ளது, இதில் ஏற்கனவே OPPO F19 Pro மற்றும் OPPO F19 Pro + போன்கள் உள்ளன புதிய ஒப்போ போன் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே டிசைனுடன் வருகிறது. OPPO F19 க்கு 33W வேகமான சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற சிறப்பு அம்சங்களைப் பற்றி பேசுகையில், இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஆகியவை அடங்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OPPO F19  விலை தகவல் 

ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் ப்ரிசம் பிளாக் மற்றும் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18,990 ஆகும். இது ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர ஆன்லைன், ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் 9 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

OPPO F19 சிறப்பம்சங்கள் 

புதிய ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 16 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர்ஒஎஸ் 11.1 வழங்கப்பட்டு உள்ளது.
 
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 3D வளைந்த பாடி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பேட்டரியை 72 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.

ஒப்போ எப்19 அம்சங்கள்

– 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 6 ஜிபி LPDDR4x ரேம் 
– 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட் 
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர்ஒஎஸ் 11.1
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, LED பிளாஷ்
– 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார்
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 16 எம்பி செல்பி கேமரா, f/2.4
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo