OPPO A15s யின் 4GB ரேம் மற்றும் 128GBபுது வேரியண்ட் அறிமுகம்

HIGHLIGHTS

ஒப்போ நிறுவனத்தின் ஏ15எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

OPPO A15s யின் 4GB ரேம் மற்றும் 128GBபுது வேரியண்ட்  அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் ஏ15எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஒப்போ ஏ15எஸ் சிறப்பம்சங்கள்

– 6.55 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
– IMG PowerVR GE8320 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
– 13 எம்பி பிரைமரி கேமரா
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 8 எம்பி செல்பி கேமரா
– டூயல் சிம் ஸ்லாட்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
– 4230 எம்ஏஹெச் பேட்டரி
– 10வாட் சார்ஜிங்

தற்சமயம் கூடுதல் மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி ஒப்போ ஏ15எஸ் மாடலில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2 கொண்டிருக்கும் ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 3D வளைந்த பாடி, பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4230 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

விலை தகவல் 

ஒப்போ ஏ15எஸ் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் டைனமிக் பிளாக் மற்றும் பேன்சி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 12,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo