ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியா உள்பட பல்வேறு இதர நாடுகளில் புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஒன்பிளஸ் 9 சீரிஸ் வெளியீடு மட்டுமின்றி, முன்னணி கேமரா உற்பத்தியாளரான ஹேசில்பிளாடு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
`தலைசிறந்த ஹார்டுவேர், சிறப்பான கேமரா மற்றும் புகைப்பட துறையில் ஹேசில்பிளாடு பிராண்டின் நிபுணத்துவம் கொண்டு ஒன்பிளஸ் 9 சீரிஸ் இதுவரை வெளியானதில் பிரீமியம், பிளாக்ஷிப் கேமரா கொண்டிருக்கும்' என ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்து இருக்கிறார்.
அதன்படி ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் ஹேசில்பிளாடு கேமராக்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் வடிவமைப்பு முந்தைய ரென்டர்களில் வெளியான தகவல்களில் இருந்ததை போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் சில்வர் நிற பேக் பேனலில் செவ்வக கேமரா மாட்யூல் மற்றும் ஹேசில்பிளாடு பிராண்டிங் கொண்டிருக்கலாம்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile