அட்டகாசமான அம்சங்களுடன் Moto G60 மற்றும் Moto G40 Fusion இந்தியாவில் அறிமுகம்.

HIGHLIGHTS

Moto G60 மற்றும் Moto G40 Fusion ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Moto G60 விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி துவங்குகிறது.

மோட்டோ ஜி40 பியூஷன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மே 1 ஆம் தேதி துவங்குகிறது.

அட்டகாசமான  அம்சங்களுடன்  Moto G60 மற்றும் Moto G40 Fusion இந்தியாவில் அறிமுகம்.

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் மோட்டோரோலா தனது லேட்டஸ்ட் இரண்டு ஸ்மார்ட்போன்களான Moto G60 மற்றும்  Moto G40 Fusion ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட்டில் விற்பனைக்குக் கிடைக்கும், மேலும் இரண்டு போன்களும் ஒரே சிப்செட்டைப் பயன்படுத்தியது போல இந்த இரண்டு போன்களுக்கு இடையில் சில ஒற்றுமைகள் இருப்பதைக் காண்பீர்கள். இது தவிர, மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களில் 6000 எம்ஏஎச் பேட்டரி வேலை செய்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களின் அனைத்து அம்சங்கள்,  அறிமுக சலுகைகள் மற்றும் கிடைக்கும் தன்மை தொடர்பான தகவல்களை இப்போது தருகிறோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Moto G60 மற்றும் Moto G40 Fusion விலை தகவல் 

மோட்டோ ஜி60 மற்றும் ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் டைனமிக் கிரே மற்றும் பிராஸ்டெட் ஷேம்பெயின் நிறங்களில் கிடைக்கிறது. மோட்டோ ஜி60 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி துவங்குகிறது.

மோட்டோ ஜி40 பியூஷன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மே 1 ஆம் தேதி துவங்குகிறது.

மோட்டோ ஜி60 மற்றும் ஜி40 பியூஷன் அம்சங்கள்

– 6.8 இன்ச் 1080×2460 பிக்சல் FHD+ 120Hz ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி (ஜி40 பியூஷன்)
– 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11
– ஹைப்ரிட் டூயல் சிம்
– ஜி60 – 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.7, LED பிளாஷ்
– 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– ஜி40 பியூஷன் – 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
– 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 32 எம்பி செல்பி கேமரா
– 16 எம்பி செல்பி கேமரா – ஜி40 பியூஷன்
– பின்புறம் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
– 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் 

இரு ஸ்மார்ட்போன்களில் 6.8 இன்ச் மேக்ஸ் விஷன் FHD+LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
 
இத்துடன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போபவர்  சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. ஜி60 மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி40 பியூஷன் 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo