புதிய அப்டேட் கான்வெர்சேஷன் பபிள், ஸ்கிரீன் ரெக்கார்டிங், மேம்பட்ட மீடியா கண்ட்ரோல் மற்றும் பிரைவசி அப்கிரேடு போன்ற அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அப்டேட் ஐக்கிய ராஜ்ஜியத்தில் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படலாம்.
Survey
✅ Thank you for completing the survey!
புதிய அப்டேட் கான்வெர்சேஷன் பபிள், ஸ்கிரீன் ரெக்கார்டிங், மேம்பட்ட மீடியா கண்ட்ரோல் மற்றும் பிரைவசி அப்கிரேடு போன்ற அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஜனவரி 2021 மாதத்துக்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.
மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 11 அப்டேட் உடன் ஜனவரி 2021 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. மோட்டோ ஜி ப்ரோ பயனர்கள் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்ததை ரெடிட் தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக 2020 டிசம்பர் மாதத்தில் மோட்டோ ஜி ப்ரோ உள்பட 22 இதர மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என மோட்டோரோலோ தெரிவித்து இருந்தது. எனினும், வெளியீட்டுக்கான காலக்கெு பற்றி எந்த தகவலும் வழங்கப்படாமல் இருந்தது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile