xiaomi யின் Mi 10T விலை 3,000ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
Xiaomi 10டி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டது
Xiaomi மாடலின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ. 32,999, 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ. 35,999 என மாறி இருக்கிறது
இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10டி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டது. விலை குறைப்பு 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்களுக்கும் பொருந்தும். புதிய சியோமி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
Surveyவிலை குறைப்பின் படி எம்ஐ 10டி மாடலின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ. 32,999, 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ. 35,999 என மாறி இருக்கிறது. புதிய விலை எம்ஐ மற்றும் அமேசான் வலைதளங்களில் மாற்றப்பட்டுவிட்டது. ஆப்லைன் தளங்களிலும் எம்ஐ 10டி புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி எம்ஐ 10டி மற்றும் எம்ஐ 10டி ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
– அட்ரினோ 650 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம்
– 128 ஜிபி (UFS 3.1) மெமரி
– எம்ஐ 10டி ப்ரோ – 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
– டூயல் சிம்
– எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– எம்ஐ 10டி — 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, எல்இடி பிளாஷ்
– 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
– 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
– எம்ஐ 10டி ப்ரோ — 108 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, எல்இடி பிளாஷ்
– 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சிறப்பம்சங்களை பொருத்தவரை எம்ஐ 10டி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், எக்ஸ்55 5ஜி மோடெம், கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த போனிலிருந்து 8 கே வீடியோ பதிவு செய்யலாம். போனில் உள்ள பேட்டரிக்கு 5000 mAh பேட்டரி வழங்கப்படுகிறது, இது 33W வேகமான சார்ஜிங்குடன் வருகிறது. இணைப்பிற்காக, இந்த போனில் 4G LTE, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் / NavIC, NFC, அகச்சிவப்பு மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போன்ற அம்சங்கள் உள்ளன. இது கைரேகை சென்சார் கொண்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile