ஐகூ 7 சீரிஸ் இந்திய வெளியீடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில், தற்போது ஐகூ 7 லெஜண்ட் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய ஐகூ 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Survey
✅ Thank you for completing the survey!
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் என ஐகூ ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஐகூ 7 மாடல் விலை மேலும் குறைவாகவே இருக்கும். ஐகூ 7 சீரிஸ் மாடல்கள் கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் விவோ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஐகூ 7 லெஜண்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கிறது. ஐகூ 7 மாடலிலும் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இது ஸ்னாப்டிராகன் 870 பிராசஸராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரு மாடல்களுடன் ஐகூ நியோ 5 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், iQOO 7 இல் 48 மெகாபிக்சல் முதல் கேமரா எஃப் / 1.79 அப்ரட்ஜர் , 13 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா எஃப் / 2.2 அப்ரட்ஜர் மற்றும் 13 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா எஃப் / 2.46 அப்ரட்ஜர், பின்புற ஆட்டோ ஃபோகஸ் மற்றும் பின்புற ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்ஃபி எடுக்க எஃப் / 2.0 அப்ரட்ஜர் கொண்ட 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile