ஆப்பிள் தனது ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களின் பர்பில் நிற வேரியண்டை அறிமுகம் செய்தது. முன்னதாக இரு ஐபோன்களும் புளூ, கிரீன், பிளாக், வைட் மற்றும் பிராடக்ட் ரெட் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஐபோன் 12 மற்றும் ஐபோன் மினி மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 5.4 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, HDR மற்றும் டால்பி விஷன் வசதி கொண்டிருக்கின்றன. இத்துடன் செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கின்றன.
Survey
✅ Thank you for completing the survey!
புதிய நிறம் கொண்ட ஐபோன்கள் ஐஒஎஸ் 14.5 வெர்ஷன் கொண்டிருக்கும். இந்த ஒஎஸ் பயனர் முகக்கவசம் அணிந்து இருந்தால் ஆப்பிள் வாட்ச் கொண்டு ஐபோனினை அன்லாக் செய்யும் வசதி கொண்டுள்ளது.
இரு மாடல்களிலும் ஏ14 பயோனிக் பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து கேமராக்களிலும் நைட் மோட் மற்றும் நைட் மோட் டைம்-லேப்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளன.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile