Realme Narzo 30 5000mAh பேட்டரி மற்றும் ஹீலியோ ஜி95,ப்ரோசெசருடன் விரைவில் அறிமுகமாகும்.

HIGHLIGHTS

Realme தனது நார்சோ 30 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

Realme Narzo 30 சீரிஸ் மலேசியாவில் மே 18 அன்று அறிமுகப்படுத்தப்படும்

புது ரியல்மி ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்

Realme Narzo 30  5000mAh  பேட்டரி மற்றும் ஹீலியோ ஜி95,ப்ரோசெசருடன் விரைவில் அறிமுகமாகும்.

Realme தனது நார்சோ 30 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சீரிஸின் வெளியீட்டு தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது Realme Narzo 30 சீரிஸ் மலேசியாவில் மே 18 அன்று அறிமுகப்படுத்தப்படும். இருப்பினும், இது எவ்வளவு காலம் மலேசியாவுக்கு வெளியே இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு கொண்டு வரப்படும் என்பது தற்போது வழங்கப்படவில்லை. இந்த போன் அறிமுகப்படுத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, போனின் அனைத்து சிறப்பம்சங்கள் மற்றும் டிசைன் தகவல்கள் லீக் ஆகியுள்ளன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 30ஏ மற்றும் நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்போது நார்சோ 30 ஸ்மார்ட்போன் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.

அதன்படி RMX2156 மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது ரியல்மி ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், பன்ச் ஹோல் ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

ரியல்மி நார்சோ 30 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

– 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
– 900MHz மாலி-G76 3EEMC4 GPU
– 6 ஜிபி LPPDDR4x ரேம்
– 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
– டூயல் சிம் ஸ்லாட் 
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
– 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
– 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
– 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
– பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக் 
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo