iQoo Z3 5G அறிமுகத்திற்க்கு முன்பே சிறந்த அமேசான் ஆபர் அறிமுகப்படுத்தியுள்ளது
ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸருடன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் ஐகூ இசட்3 என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜூன் 2 ஆம் தேதி, இந்த தொலைபேசியின் கேமரா சிறப்பம்சங்கள் முன்னிலைப்படுத்தப்படும்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸருடன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் ஐகூ இசட்3 என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இசட்3 மாடலுக்கென மைக்ரோசைட் அமேசான் உருவாக்கப்பட்டு உள்ளது.
Surveyஅமேசானில் உள்ள iQoo Z3 இன் மைக்ரோசைட் படி, போனின் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் ஜூன் 1 அன்று அதாவது இன்று சொல்லப்படும். அதே நேரத்தில், ஜூன் 2 ஆம் தேதி, இந்த தொலைபேசியின் கேமரா சிறப்பம்சங்கள் முன்னிலைப்படுத்தப்படும். இதற்குப் பிறகு, ஜூன் 3 ஆம் தேதி, கேமிங் அனுபவம் மற்றும் ஜூன் 4 ஆம் தேதி, தொலைபேசியின் காட்சி மற்றும் வடிவமைப்பு தெரிவிக்கப்படும். இருப்பினும், இந்த தொலைபேசி எப்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை கொடுக்கப்படவில்லை.
அமேசான் தளத்தில் ஐகூ3 மைக்ரோசைட் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியிடப்படுகிறது. எனினும், ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வது மட்டுமின்றி சிறப்பு போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு ஐகூ இசட்3 ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அம்சங்களை பொருத்தவரை ஐகூ இசட்3 மாடலில் 6.58 இன்ச் FHD+ 1080×2408 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 120Hz ஸ்கிரீன், ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸர், அட்ரினோ 620 GPU, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4400 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile