அசத்தலான அம்சங்களுடன் Google Pixel 6 மற்றும் Pixel 6 Pro அறிமுகம் ஆண்ட்ராய்டு 12 கொண்டிருக்கும்.

HIGHLIGHTS

Google Pixel Fal தொடக்க நிகழ்வை கூகுள் ஏற்பாடு செய்தது

பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது

விலை ரூ. 45,000 முதல் தொடங்குகிறது

அசத்தலான அம்சங்களுடன் Google Pixel 6 மற்றும் Pixel 6 Pro  அறிமுகம் ஆண்ட்ராய்டு 12 கொண்டிருக்கும்.

கூகிளின் பிக்சல்  வெளியீட்டு விழாவில் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு கூகிள் பிக்சல் போன்களுக்கும் டென்சர் என்ற நிறுவனத்தின் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது, இது ஏற்கனவே சிறந்த செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் (ML) செயல்திறன் முடிவுகளுடன் வருகிறது. புதிய வடிவமைப்பு பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோவில் கொடுக்கப்பட்டுள்ளது. போனின் பின்புற பேனலில் கேமரா பார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், முன்புறத்தில் ஒரு பஞ்ச்-ஹோல் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு போன்களும்  IP68 சான்றிதழ் பெற்றவை.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கூகுள் பிக்சல் 6  விலை தகவல் 

பிக்சல் 6 மாடல் ஸ்டாமி பிளாக், கைண்டா கோரல் மற்றும் சோர்டா சீபோம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 44,970, 8 ஜிபி + 256 ஜிபி விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 52,480 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிக்சல் 6 ப்ரோ மாடல் ஸ்டாமி பிளாக், சோர்டா சன்னி மற்றும் கிளவுடி வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி + 128 ஜிபி விலை 899 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 67,490 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 74,995 என்றும் 12 ஜிபி + 512 ஜிபி விலை 1099 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 82,500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கூகுள் பிக்சல் 6  சீரிஸ் சிறப்பம்சம் 

 பிக்சல் 6 மாடலில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு மாடல்களிலும் கூகுள் டென்சார் பிராசஸர், டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப், ஆண்ட்ராய்டு 12, ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 6 ப்ரோ மாடலில் 48 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

 கூகுள் பிக்சல் 6 ப்ரோ 

பிக்சல் 6 மாடலில் 8 எம்பி செல்பி கேமரா, பிக்சல் 6 ப்ரோ மாடலில் 11 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு கொண்டிருக்கின்றன. பேட்டரியை பொருத்தவரை பிக்சல் 6 மாடலில் 4614 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo