BSNL யின் புதிய மாற்றம் இப்பொழுது இந்த திட்டத்தில் கிடைக்கும் தினமும் 2GB டேட்டா.

HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் ப்ரீ-பெய்டு திட்டங்களில் ஒன்றை மீண்டும் புதுப்பித்துள்ளது.

பிஎஸ்என்எல்லின் ரூ.187 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

BSNL இன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் முன்பு 24 நாட்களாக இருந்த 28 நாட்களாக மாறியுள்ளது

BSNL  யின் புதிய மாற்றம் இப்பொழுது இந்த திட்டத்தில் கிடைக்கும் தினமும் 2GB  டேட்டா.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் ப்ரீ-பெய்டு திட்டங்களில் ஒன்றை மீண்டும் புதுப்பித்துள்ளது. இந்த அப்டேட்டிற்குப் பிறகு, பிஎஸ்என்எல்லின் ரூ.187 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். BSNL இன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் முன்பு 24 நாட்களாக இருந்த 28 நாட்களாக மாறியுள்ளது. இந்தத் திட்டத்தைத் தவிர ரூ.147, ரூ.247, ரூ.447 ஆகிய திட்டங்களையும் பிஎஸ்என்எல் புதுப்பித்துள்ளது. ரூ.56, ரூ.57 மற்றும் ரூ.58 ஆகிய திட்டங்கள் கடந்த மாதம்தான் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த அப்டேட் குறித்த தகவலை பிஎஸ்என்எல் கேரளா ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. ரூ.187 திட்டத்தில் அன்லிமிட்டட் காலிங் கிடைக்கிறது, இது லோக்கல் , STD, தேசிய ரோமிங் மற்றும் MTNL நெட்வொர்க்குகளுக்கும் பொருந்தும். ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, இணைய வேகம் 80Kbps ஆக இருக்கும். ரூ.187 திட்டத்தில், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

கடந்த மாதமே, BSNL ஒரே நேரத்தில் மூன்று ப்ரீ-பெய்டு திட்டங்களை புதுப்பித்துள்ளது, அதன் விலைகள் முறையே ரூ.56, ரூ.57 மற்றும் ரூ.58. BSNL இன் ப்ரீ-பெய்டு திட்டமான ரூ.56 5,600 வினாடிகள் பேச்சு நேரத்தை 8 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது, ரூ.57 திட்டமானது 10 dB டேட்டா மற்றும் ஜிங் பொழுதுபோக்கு இசையை வழங்குகிறது.

ரூ.57 திட்டத்தின் வேலிடிட்டியாகும் காலம் 10 நாட்கள். இப்போது ரூ 58 யின் கடைசி திட்டத்தைப் பற்றி பேசினால், அதை 30 நாட்கள் சர்வதேச ரோமிங்கிற்கு பயன்படுத்தலாம். நீங்கள் இந்த புதிய திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்பினால், உங்கள் பிஎஸ்என்எல் எண்ணிலிருந்து 123 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பலாம். ரீசார்ஜ் செய்வதற்கு இணையதளம் மற்றும் ஆப்ஸின் உதவியையும் நீங்கள் பெறலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo