Asus ZenFone 8 மற்றும் Asus ZenFone 8 Flip ஸ்னாப்ட்ரகன் 888 மற்றும் அதிக பட்ச 16GB உடன் அறிமுகம்.

HIGHLIGHTS

Asus ZenFone 8 மற்றும் Zenfone 8 Flip யில் 16GB வரையிலான ரேம்

வலுவான ஸ்னாப்டிராகன் 888 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது

5000 எம்ஏஎச் வரை பேட்டரி வழங்கப்படுகிறது

Asus ZenFone 8 மற்றும் Asus ZenFone 8 Flip ஸ்னாப்ட்ரகன் 888 மற்றும் அதிக பட்ச 16GB உடன் அறிமுகம்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Asus  உலகளவில் ZenFone  சீரிஸ் அறிமுகப்படுத்தியது  இந்த சீரிஸின் கீழ்  Asus ZenFone 8  Asus ZenFone 8 மற்றும் Asus ZenFone 8 Flip ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜென்ஃபோன் 8 ஃபிளிப்பின் தோற்றம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போன்களுடன் மிகவும் ஒத்திருக்கிறது. அதே நேரத்தில், ஜென்ஃபோன் 8 ஒரு கை நட்பு சாதனமாக மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Asus ZenFone 8 மற்றும் Asus ZenFone 8 Flip சிறப்பம்சங்கள் 

5.9 இன்ச் 120Hz E4 AMOLED டிஸ்ப்ளே, 6.67 இன்ச் FHD பிளஸ் 90Hz சாம்சங் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இரு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 5ஜி SA/NSA, அதிகபட்சம் 16 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த சென் யுஐ ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. சென்போன் 8 ப்ளிப் மாடலில் ப்ளிப் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சென்போன் 8 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ளிப் மாடல்களில் முறையே 5000எம்ஏஹெச் மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 30 வாட் குவிக் சார்ஜ் 4.0 பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

Asus ZenFone 8 மற்றும் Asus ZenFone 8 Flip Price

சென்போன் 8 மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் ஹாரிசான் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 44,095 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 965 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,040 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்போன் 8 ப்ளிப் மாடல் கேலக்டிக் பிளாக் மற்றும் கிளேசியல் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 965 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,040 ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo