மிக அசத்தலான நிறத்தில் Asus ROG Phone 5 அறிமுகம்.
நாட்டின் மற்றும் உலகின் பிரபலமான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால், நாங்கள் உங்களுக்கு ஆசஸ் ROG போன் 5 பற்றி சொல்கிறோம். ஆம், இந்த ஸ்மார்ட்போனின் வெள்ளை நிறம் முதன்முறையாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் , விலை போன்றவற்றைப் பற்றிய தகவல்களை இங்கே தருகிறோம்.
Surveyஅசுஸ் நிறுவனம் ரோக் போன் 5 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வைட் நிற வேரியண்ட்டை விற்பனைக்கு அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 49,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Asus ROG Phone 5 அம்சங்கள்
– 6.78 இன்ச் 2448×1080 பிக்சல் FHD+ 144Hz OLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
– அட்ரினோ 660 GPU
– 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
– 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரோக் யுஐ
– டூயல் சிம் ஸ்லாட்
– 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8
– 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
– 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.0
– 24 எம்பி செல்பி கேமரா, 0.9µm, f/2.0
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
– யுஎஸ்பி டைப் சி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
– 65 வாட் ஹைப்பர் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
புதிய ROG போன் மாடல் இரண்டு மாதங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விற்பனை விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் ரோக் போன் 5 ப்ரோ மற்றும் அல்டிமேட் வெர்ஷன்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile