Airtel Vs Jio ப்ரீபெய்ட் திட்டத்தின் அதிகரிப்புக்கு பிறகு எது பெஸ்ட்

HIGHLIGHTS

ஏர்டெல் ரகசியமாக தனது ப்ரீபெய்டு திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது.

Airtel குறைந்த விலை ப்ரீ-பெய்டு திட்டம் ரூ.99 ஆனது, இது முன்பு ரூ.79 ஆக இருந்தது

ஜியோ ரூ.98 திட்டத்தில் 14 நாட்கள் வேலிடிட்டியாகும் மற்றும் 1.5 ஜிபி டேட்டா தினமும் கிடைக்கிறது.

Airtel Vs Jio ப்ரீபெய்ட் திட்டத்தின் அதிகரிப்புக்கு பிறகு எது பெஸ்ட்

ஏர்டெல் ரகசியமாக தனது ப்ரீபெய்டு திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. ஏர்டெல்லின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, அதன் குறைந்த விலை ப்ரீ-பெய்டு திட்டம் ரூ.99 ஆனது, இது முன்பு ரூ.79 ஆக இருந்தது. இது தவிர, பல திட்டங்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த முடிவின் மூலம், ஏர்டெல் ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (ARPU) 200 ரூபாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோவின் இந்த முடிவிற்குப் பிறகு, தங்கள் திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றலாம். சரி, ஏர்டெல்லுடன் ஒப்பிடும்போது இந்த நேரத்தில் ஜியோவின் திட்டம் எவ்வளவு குறைவானது என்பதை  தெரிந்து கொள்ளுங்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

99 ரூபாயின் திட்டம்.

ஏர்டெல்லின் குறைந்த விலை ப்ரீ-பெய்டு திட்டம் முன்பு ரூ.79 ஆக இருந்தது, இப்போது ரூ.99 ஆகிவிட்டது. இதன் விலை 20 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தில், ரூ.99 டாக் டைம் கிடைக்கும். இது தவிர 200 எம்பி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள். இதில் அன்லிமிட்டட் காலிங் வசதி இல்லை.

ஜியோ ரூ.98 திட்டத்தில் 14 நாட்கள் வேலிடிட்டியாகும் மற்றும் 1.5 ஜிபி டேட்டா தினமும் கிடைக்கிறது. அன்லிமிட்டெட் காலிங் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், டேட்டா மற்றும் காலிங் காரணமாக, இந்த திட்டமும் ஏர்டெல்லை விட குறைவானது 

149 ரூபாய் கொண்ட திட்டம்.

ஏர்டெல்லின் ரூ.149 திட்டம் இப்போது ரூ.179 ஆகிவிட்டது. இந்த திட்டத்தில், 28 நாட்கள் செல்லுபடியாகும், மொத்தம் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு அனைத்து நெட்வொர்க்குகளிலும் கிடைக்கும்.

ஜியோவின் ரூ.149 திட்டத்தில், தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் காலிங் , 100 எஸ்எம்எஸ் வசதி உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஜியோவின் இந்த திட்டம் ஏர்டெல்லை விட 30 ரூபாய் மலிவானது.

399 ருபாய் கொண்ட திட்டம்.

56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் ஏர்டெல்லின் ரூ.399 திட்டம் தற்போது ரூ.479 ஆக மாறியுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

ஜியோவில் இன்னும் ரூ.399 திட்டம் உள்ளது, இது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட்  காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 56 நாட்கள் செல்லுபடியாகும். இதுபோன்ற சூழ்நிலையில், ஏர்டெல்லின் இந்த திட்டமும் ஜியோவை விட விலை உயர்ந்ததாகிவிட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo