17 OTT சேவையுடன் Airtel பிராட்பேண்ட் All-in-One சலுகை அறிவிப்பு.

HIGHLIGHTS

ஏர்டெல் மூன்று புதிய எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை அறிவித்துள்ளது,

17 OTTகள், 350 பிளஸ் டிவி சேனல்கள் மற்றும் 4K எக்ஸ்ஸ்ட்ரீம் டிவி பாக்ஸ் ஆகியவை அடங்கும்

இவை ஜியோஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளன

17 OTT சேவையுடன் Airtel பிராட்பேண்ட்  All-in-One சலுகை அறிவிப்பு.

ஏர்டெல் மூன்று புதிய எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை அறிவித்துள்ளது, அதில் 17 OTTகள், 350 பிளஸ் டிவி சேனல்கள் மற்றும் 4K எக்ஸ்ஸ்ட்ரீம் டிவி பாக்ஸ் ஆகியவை அடங்கும். இந்த திட்டங்கள் வரம்பற்ற டேட்டா, வொய்ஸ் கால் மற்றும் டிடிஎச் சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஏர்டெல் நிறுவனம் மூன்று புது பிராட்பேண்ட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை ஜியோஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய கனெக்டெட் வீடுகளுக்கான பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது என ஏர்டெல் தெரிவித்துள்ளது. 

புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகள் விலை முறையே ரூ. 699, ரூ. 1099 மற்றும் ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை முறையே 40Mbps, 200Mbps மற்றும் 300Mbps வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவற்றுடன் 14 பிரீமியம் ஒ.டி.டி. சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 699 சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, ரூ. 1099 சலுகையுடன் அமேசான் பிரைம் வீடியோ, ரூ. 1599 சலுகையுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சேவையில் சோனிலிவ், லயன்ஸ்கேட், ஹொய்சொய், மனோரமாமேக்ஸ், ஷீமாரூ, அல்ட்ரா, ஹங்காமாபிளே, டிவோடி.வி., க்ளிக், நம்மஃப்ளிக்ஸ், டாலிவுட் மற்றும் ஷார்ட்ஸ் டி.வி. சந்தா வழங்கப்படுகிறது. ஏர்டெல் 4K ஹைப்ரிட் டி.வி. பாக்ஸ்-இல் 350-க்கும் அதிக டி.வி. சேனல்களை ஒற்றை சாதனம் மற்றும் ரிமோட்டில் வழங்குகிறது. இந்த பாக்ஸ்-க்கான கட்டணம் ரூ. 2 ஆயிரம் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

பிராட்பேண்ட் சலுகைகளுடன் 3333GB டேட்டா வழங்கப்படும். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதல் மாதத்திற்கான வாடகையை மற்றும் இன்ஸ்டாலேஷனை இலவசமாக வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo