Acer Swift 5-Swift அட்டகாசமான லேப்டாப் 12Gen இன்டெல் கோர் வசதியுடன் அறிமுகம்.

HIGHLIGHTS

ஏசர் ஸ்விஃப்ட் 5-ஸ்விஃப்ட் 3 வெளியீடு

12வது ஜெனரல் இன்டெல் கோர் செயலி பொருத்தப்பட்டுள்ளது

பல வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது

Acer Swift 5-Swift அட்டகாசமான லேப்டாப் 12Gen  இன்டெல் கோர் வசதியுடன் அறிமுகம்.

உங்களிடம் லேப்டாப் வாங்கும் திட்டம் இருந்தால், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 12வது ஜெனரல் இன்டெல் கோர் செயலிகள் மூலம் லேப்டாப்களை வாங்கலாம். ஏசர் ஸ்விஃப்ட் 5 மற்றும் ஸ்விஃப்ட் 3 மடிக்கணினிகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 12 வது தலைமுறை இன்டெல் கோர் செயலிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிவோம். ஏசர் ஸ்விஃப்ட் 5 ஒரு பிரீமியம் சலுகையாகும், இது நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ஸ்விஃப்ட் 3 வேலை மற்றும் சாதாரண சுயவிவரங்கள் இரண்டிற்கும் பொருந்துகிறது. இதில் நீங்கள் பல வண்ண விருப்பங்களையும் பெறுவீர்கள். இந்த இரண்டு லேப்டாப்புக்கு 14-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேக்கள் மற்றும் இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு மடிக்கணினிகளும் மெல்லிய மற்றும் இலகுரக CNC-இயந்திர யூனிபாடி சேஸ்ஸைக் கொண்டுள்ளன என்று நிறுவனம் கூறுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஸ்விஃப்ட் 5 லேப்டாப்பில் 14-inch WQXGA (2,560×1,600 pixels) டச் ஸ்கிரீன் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ 16:10 ஆகும். இதன் ஸ்கிரீன் டூ பாடி ரேட்ஷியோ 92.22-ஆக உள்ளது. இதன் டிஸ்பிளே ஆன்டி மைக்ரோபியல் கார்னிங் கொண்ட கொரில்லா கிளாஸுடன், தேய்மானம் மற்றும் பாதுகாப்புக்கு ஐயானிக் சில்வர் உட் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப்பில் 12 கோர் இன்டல் கோர் சிபியூ இடம்பெற்றுள்ளது. இன்டெல் ஐரிஸ் எக்ஸ்இ கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 16 ஜிபி அளவில் டூயல் சேனல் LPDDR5 ரேம் வழங்கப்பட்டுள்ளது. 2 டிபி PCIe Gen 4 SSD ஸ்டோரேஜ் தரப்பட்டுள்ளது.

இதன் டச்பேட் பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள ஓஷன்கிளாஸ் என அழைக்கப்படுகிறது. மேலும் இது மல்டி ஃபிங்கர் மூமன்ட்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் கைரேகை சென்சார் பவர் பட்டன், வாய்ஸ் காம்பெட்டபிலிட்டி கொண்ட கோர்டனா ஆகியவை தரப்பட்டுள்ளன.

இதில் தரப்பட்டுள்ள ஏசரின் டெம்பரல் நாய்ஸ் ரிடக்‌ஷன் கொண்ட ஃபுல் ஹெச்.டி MIPI வெப்கேம் குறைந்த வெளிச்சத்திலும் அதிக தரம் வாய்ந்த வீடியோக்களை எடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஏ.ஐ நாய்ஸ் ரெடக்‌ஷன் டெக்னாலஜி இரைச்சல் இல்லாமல் உரையாடுவதற்கு உதவுகிறது. இதன் பேக் லிட் கீபோர்ட் சாதாரண கீபோர்ட்டை விட 8-10% வெப்பத்தை வெளியிடும். இந்த லேப்டாப்பில் உள்ள ட்வின்ஏர் டூயல் ஃபேன் சிஸ்டர் மற்றும் டி6 வெப்ப பைப்புகள் காற்றோட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த லேப்டாப்பில் 10 மணி நேரம் வரை பேட்டரி லைஃப் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 30 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் 4 மணி நிற்கும் திறனை கொண்டுள்ளது. வைஃபை 6இ, தன்டர்போல்ட் 4 இணைப்பு, ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட், 3.2 ஜென் 1 யூஎஸ்பிக்கள் அகியவை கொண்டுள்ள இந்த லேப்டாப்பின் விலை ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் ரூ.1,51,800-க்கும், சீனாவில் ரூ.1,19,000-க்கும், இந்தியாவில் ரூ.1,12,700-க்கும் கிடைக்கும். இதன் இந்திய வெளியீட்டு தேதி தெரிவிக்கப்படவில்லை.

ஏசர் ஸ்விஃப்ட் 3 லேப்டாப்பில் 14 இன்ச் ஃபுல் ஹெச்.டி அல்லது  QHD டச் ஸ்கிரீன் டிஸ்பிளே 16:9 ரேட்ஷியோவில் வழங்கப்ப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப் 12 ஜெனரேஜன் இண்டல் கோர் பிராசஸரை கொண்டுள்ளது. 2 டிபி வரையிலான எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜையும் தருகிறது.

இந்த லேப்டாப்பில் ட்வின் ஏர் டூயல் ஃபேன் கூலிங் சிஸ்டம் பிற லேப்டாப்களை விட 65.8% திறனை வழங்குகிறது. இந்த லேப்டாப்பில் பிற அம்சங்கள் அனைத்தும் ஸ்விஃப்ட் 5 லேப்டாப்பில் இடம்பெற்றவை தான் இதிலும் தரப்பட்டுள்ளன.

இந்த லேப்டாப் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் ரூ.1,01,200-க்கும், சீனாவில் ரூ.65,500-க்கும், வட அமெரிக்காவில் ரூ.64,000-க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo