Vodafone Idea இந்த பயனர்களுக்கு கிடைக்கும் ஒவ்வ்வொரு மாதமும் இலவச 2GB டேட்டா.

HIGHLIGHTS

Vi இன் திட்டங்களின் விலை இன்று முதல் அதிகரித்துள்ளது

ஏர்டெல் திட்டங்களின் விலை நவம்பர் 26 முதல் அதிகரிக்கப் போகிறது.

வோடபோன் ஐடியா தனது பயனர்களுக்கு டேட்டா டிலைட் என்ற புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது

Vodafone Idea  இந்த பயனர்களுக்கு  கிடைக்கும் ஒவ்வ்வொரு மாதமும் இலவச  2GB  டேட்டா.

தொலைத்தொடர்பு துறையில் பெரும் பரபரப்பு நிலவுவதை நாம் அறிவோம். ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. Vi இன் திட்டங்களின் விலை இன்று முதல் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஏர்டெல் திட்டங்களின் விலை நவம்பர் 26 முதல் அதிகரிக்கப் போகிறது. இந்த முடிவால் பயனர்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர். வெளிப்படையாக, பயனர்கள் முன்பை விட இப்போது அதே நன்மைகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும். பயனர்களின் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, வோடபோன் ஐடியா தனது பயனர்களுக்கு டேட்டா டிலைட் என்ற புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகை பற்றி தெரிந்து கொள்வோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த சலுகை டேட்டா டிலைட் என்று அழைக்கப்படுகிறது, இதன் கீழ் 2ஜிபி கூடுதல் டேட்டாவை இலவசமாகப் பெறலாம். இந்த டேட்டா டிலைட் சலுகையை Vi Hero அன்லிமிடெட் டெய்லி டேட்டா பேக்குகளின் வழியாக பெறலாம், இது ரூ.299 முதல் தொடங்குகிறது.

குறிப்பிடத்தக்க வண்ணம், இந்தச் சலுகை தானாகப் பயன்படுத்தப்படாது, பயனர்கள் Vi மொபைல் ஆப் மூலம் கைமுறையாக ஆக்டிவேட் செய்ய வேண்டும். நினைவூட்டும் வண்ணம், Vi Hero அன்லிமிடெட் திட்டங்கள் ‘பிங்கே ஆல் நைட்’ மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் பலன்களையும் வழங்குகின்றன.

நாம் இங்கே பேசும் Vi Data Delight ஆபர் ஏற்கனவே நேரலையில் உள்ளது மற்றும் இது கீழ் வரும் திட்டங்களுக்கு பொருந்தும். அவைகள் ரூ.299, ரூ.359, ரூ.399, ரூ.409, ரூ.475, ரூ.479, ரூ.501, ரூ.539, ரூ.599, ரூ.701, ரூ.719, ரூ.839, ரூ.901, ரூ.1,499, ரூ.2,899, மற்றும் ரூ.3,099 ஆகும்.

இந்த திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி அளவிலான கூடுதல் பேக்-அப் டேட்டாவை எந்த கட்டணமும் இல்லாமல் வழங்குகின்றன. இந்தச் சலுகையைப் பெற, பயனர்கள் Vi ஆப்பில் லாக் இன் செய்ய வேண்டும் அல்லது 121249 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.

ரிஜிஸ்டர் முடிந்ததும், ஆக்டிவேஷன் பறி வி நிறுவனம் தன் பயனர்களுக்கு SMS மூலம் அதை உறுதி செய்யும். டேட்டா டிலைட் நன்மையை கண்டறிந்து முதலில் அறிக்கை வெளியிட்டது டெலிகாம் டாக் ஆகும்.

முன்னரே குறிப்பிட்டபடி, அனைத்து Vi Hero அன்லிமிடெட் திட்டங்களும் 'Binge All Night' நன்மைகளை வழங்குகின்றன, இது மெயின் பேக்கில் இருந்து எந்த டேட்டாவை எடுக்காமல் 12am முதல் 6am வரை டேட்டாவை பயன்படுத்தலாம்.  வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் நன்மையையும் கிடைக்கும். இது வார நாட்களில் இருந்து பயன்படுத்தப்படாத தினசரி டேட்டா ஒதுக்கீட்டை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைக்கும்படி செய்கிறது.

சலுகையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது இங்கே: இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்கள் எண்ணிலிருந்து 121249 (Tolfree ) எண்ணை அழைக்க வேண்டும். இதற்குப் பிறகு உங்களுக்கு ஒரு செயல்முறை கூறப்படும். அதன் பிறகு நீங்கள் அவரைப் பின்பற்ற வேண்டும். பின்னர் இந்த சேவை உங்கள் எண்ணில் செயல்படுத்தப்படும். இந்தச் சலுகையைப் பெற முடியாவிட்டால் அதற்கான காரணத்தை உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo