பெரிய இடியை போட்ட ரயில்வே இன்று முதல் ரயில் கட்டணத்தின் விலை உயர்வு இனி ரயிலில் பயணிக்க அதிக பணம் தரனும்

பெரிய இடியை போட்ட ரயில்வே இன்று முதல் ரயில் கட்டணத்தின் விலை உயர்வு இனி ரயிலில் பயணிக்க அதிக பணம் தரனும்

இந்திய ரயில்வேயின் நாடு தழுவிய கட்டண உயர்வைத் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளதால், இனி ரயில் கட்டணத்தின் விலை இன்று முதல் உயரும் என கூறப்பட்டுள்ளது மேலும் இது ஆறு மாதர்த்திக்குள் இது இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது, இதற்க்கு முன்னதாக இந்த ஆண்டு ஜூலை மாதம் தான் விலை உயர்த்தப்பட்டது ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, ₹700 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று செய்தி நிறுவனமான PTI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த விலை உயர்வு மூலம் மார்ச் 31, 2026 வரை தேசிய போக்குவரத்து நிறுவனத்திற்கு ₹600 கோடி வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரயில் கட்டணம் உயர காரணம் என்ன?

கடந்த பத்தாண்டுகளில் ரயில் வலையமைப்பும் செயல்பாடுகளும் கணிசமாக விரிவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக, கட்டணங்கள் அதிகரித்துள்ளன. ரயில்வே நடவடிக்கைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது, மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த பணியாளர்கள் அதிகரிக்கப்பட்டதால் செலவுகள் அதிகரித்துள்ளன. ஊழியர்களின் செலவு ₹1.15 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஓய்வூதிய செலவுகள் ₹60,000 கோடியை எட்டியுள்ளன. 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த இயக்க செலவுகள் ₹2.63 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கலக்கும் இந்த Realme போனில் அதிரடியாக ரூ,2,274 டிஸ்கவுண்ட்

அதிகரித்து வரும் செலவுகளை ஈடுசெய்ய, இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துகிறது. பயணிகள் கட்டணங்களில் மட்டுப்படுத்தப்பட்ட மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த உத்தி பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தியுள்ளது. இந்தியா இப்போது உலகின் இரண்டாவது பெரிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் ரயில் அமைப்பாக மாறியுள்ளது. கட்டணம் அல்லாத வருவாயிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில் பெரிய உணவகச் சைன் ரயில் நிலையங்களில் விற்பனை நிலையங்களைத் திறக்க அனுமதிப்பதும் அடங்கும்.

செகண்டரி கிளாஸ் ரயில் கட்டணத்தின் உயர்வு.

  • 215 கிலோமீட்டர் வரையிலான பயணங்களுக்கு கட்டணம் உயர்வு இருக்காது.
  • 216 முதல் 750 கிலோமீட்டர் வரையிலான பயணங்களுக்கு ₹5 அதிகரிப்பு இருக்கும்.
  • 751 முதல் 1,250 கிலோமீட்டர் வரையிலான பயணங்களுக்கு ₹10 அதிகரிப்பு இருக்கும்.
  • 1,251 முதல் 1,750 கிலோமீட்டர் வரையிலான பயணங்களுக்கு ₹15 அதிகரிப்பு இருக்கும் .
  • 1,751 முதல் 2,250 கிலோமீட்டர் வரையிலான பயணங்களுக்கு ₹20 அதிகரிப்பு இருக்கும்.

எக்ஸ்ப்ரஸ் ரயில் அதிவேக விரவு ரயிலுக்கு கட்டண உயர்வு

ஸ்லீப்பர் வகுப்பு சாதாரண மற்றும் பர்ஸ்ட் கிளாஸ் சாதாரண ரயில்களுக்கு, புறநகர் அல்லாத பயணங்களில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஏசி அல்லாத மற்றும் ஏசி கிளாஸ்களில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்லீப்பர் கிளாஸ், முதல் கிளாஸ், ஏசி சேர் கார், ஏசி 3-டயர், ஏசி 2-டயர் மற்றும் ஏசி முதல் கிளாஸ் ஆகியவை அடங்கும். ஏசி அல்லாத மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் பெட்டியில் 500 கிலோமீட்டர் பயணத்திற்கு, பயணிகள் சுமார் ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த ரயிலின் புதிய மாற்றமானது இன்று முதல் அதாவது 26 டிசம்பர் அன்று முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட் மற்றும் அதற்க்கு பிறகு முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டின் விலை உயர்வாக இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo