WhatsApp யில் சிம் கார்ட் இல்லமல் மார்ச் 1 லிருந்து வேலை புதிய விதியை பற்றி தெருஞ்சிகொங்க
WhatsApp நீங்கள் வெப் வெர்சனை பயன்படுத்தி வந்தால் இது உங்களுக்கு முக்கியமான செய்தியாக இருக்கும்
whatsApp சிம் இல்லாமல் வேலை செய்யாது
WhatsApp வெப் வெர்சனை உங்களின் லேப்டாப் அல்லது PC மற்றும் டேப்லெட்டில்
WhatsApp நீங்கள் வெப் வெர்சனை பயன்படுத்தி வந்தால் இது உங்களுக்கு முக்கியமான செய்தியாக இருக்கும் அதாவது அரசின் அதிரடியால் சிம் பைண்டிங் விதியை எடுத்து வந்தது அதன் கீழ் பிப்ரவரி 28க்கு பிறகு whatsApp சிம் இல்லாமல் வேலை செய்யாது அதாவது இந்த புதிய விதியின் படி உங்கள் போனில் சிம் இல்லை என்றால் WhatsApp மட்டுமல்லாமல் டெலிக்ராம்,ஸ்னேப்சேட் , போன்றவை இயங்காது மேலும் நீங்கள் WhatsApp வெப் வெர்சனை உங்களின் லேப்டாப் அல்லது PC மற்றும் டேப்லெட்டில் பயன்படுத்தும்போது ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் லோக் அவுட் ஆகிவிடும் இந்த மிக பெரிய அதிரடி எடுக்க கரணம் மோசடியை தடுக்கும் நோக்கமாகும் மேலும் இதை பற்றி முழு தகவலை பார்க்கலாம் வாங்க.
Surveyசிம் பைண்டிங் என்றால் என்ன?
சிம் பைண்டிங் என்பது பதிவுசெய்யப்பட்ட சிம் கார்டு உள்ள போன்களில் மட்டுமே ஆப்ஸ் வேலை செய்ய அனுமதிக்கும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும். இதுவரை, போனில் சிம் கார்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும், வைஃபை அல்லது வேறு எந்த இணைய நெட்வொர்க்கிலும் வாட்ஸ்அப் வேலை செய்தது. இருப்பினும், புதிய விதிகளின்படி, சிம் கார்டை அகற்றுவது அல்லது மாற்றுவது வாட்ஸ்அப்பை உடனடியாக முடக்கிவிடும். அந்த வகையில் இந்த புதிய விதி மாரச் 1,2026 லிருந்து இருக்கும் அதாவது இனி சிம் இல்லாவிட்டால் WhatsApp வேலை செய்யது.
இதையும் படிங்க புது போன் அறிமுகமான குஷியில் Samsung Galaxy S24 போனில் அதிரடியாக ரூ,33,505 வரை குறைப்பு
புதிய விதி மற்றும் பழைய விதிக்கு என்ன சம்பந்தம்.
தற்போது, உங்கள் போனிலிருந்து சிம் கார்டை அகற்றிவிட்டாலோ அல்லது அந்த போனில் சிம் இல்லை என்றாலோ, அதன் பிறகும் செயலி தொடர்ந்து செயல்படும். புதிய விதியின் கீழ், பதிவுசெய்யப்பட்ட சிம் அந்த நேரத்தில் போனில் இருக்க வேண்டும் மற்றும் செயலில் இருக்க வேண்டும். வாட்ஸ்அப் வெப்பில் லாகின் எப்போதும் செயலில் இருக்கும், இது பல வாரங்களுக்கு நீடிக்கும். புதிய விதியின் கீழ், பாதுகாப்பு காரணங்களுக்காக, வாட்ஸ்அப் தானாகவே 6 மணி நேரத்தில் லோக்அவுட் ஆகிவிடும் . தற்போது, ஒருவர் OTP மூலம் எங்கும் லாகின் செய்யலாம் , அதேசமயம் புதிய விதியின் கீழ், சிம் பிணைப்பு இல்லாவிட்டாலும் செயலி செயல்படுவதை நிறுத்திவிடும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile