WhatsApp பெரிய க்ரூப்பை மேனேஜ் செய்ய புதிய Organizations அம்சத்தை கொண்டு வருகிறது இதன் பயன் என்ன
WhatsApp ஏற்கனவே அதன் கம்யூனிட்டிஸ் (Communities) அம்சம் 2022 யில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது பயனர்கள் தொடர்புடைய பல க்ரூப் கான்வேர்செஸன்களை ஒரே இடத்தில் கொண்டு வர முடியும். இப்பொழுது மேட்ட கொண்டு வர இருக்கும் புதிய அம்சம் Organizations ஆகும். இந்த அம்சமானது பெரிய அளவிலான க்ரூப் அதாவது கம்யூனிட்டி(community) அட்மின்ஸ் மற்றும் க்ரூப் மெம்பர்களை எளிதாக மேனேஜ் செய்ய உதவும் வரவிருக்கும் இந்த அம்சம், சமூக உறுப்பினர்களுக்கும் உட்பிரிவுகளுக்கும் (sub-groups) என பிரத்யேகமான இடத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது ஆண்ட்ராய்டு தளத்திற்காக உருவாக்கப்பட்டு வருவதாகவும், பீட்டா டெவலப்பிங்கில் இருக்கிறது இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
SurveyWhatsApp Organizations அம்சம் என்ன?
WABetaInfo தெரிவித்துள்ளபடி, ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.26.43.1-yil ‘அமைப்புகள்’ (Organisations) அம்சம் குறித்த குறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அம்சம், பெரிய சமூகங்களை நிர்வகிப்பதற்குத் தேவையான மேம்பட்ட டூல்களைச் சோசியல் நிர்வாகிகளுக்கு (community admins) வழங்குகிறது.

இந்த அறிக்கையில், வாட்ஸ்அப்பின் ‘அமைப்புகள்’ (Organisations) அம்சம் குறித்த ஸ்க்ரீன்ஷாட் (screenshot) இடம்பெற்றுள்ளது. இந்த புதிய அம்சம், கம்யூனிட்டி அட்மின்களுக்கு (community admins) தங்கள் கம்யூனிட்டி அதன் மேம்பர்களையும் மேஞ் செய்வதற்க்கான ஒரு பிரத்யேக இடமாகச் செயல்படுகிறது. இதில் அந்த அமைப்பின் பெயர், விளக்கம் மற்றும் மொத்த மெம்பர்களின் எண்ணிக்கை ஆகியவை காட்டப்படும்.
இந்த அம்சம் எப்பொழுது கிடைக்கும்?
அறிக்கையின்படி, வாட்ஸ்அப் ஆர்கனைசேஷன்ஸ் இன்னும் ஆரம்பகட்ட டெவலப்பிங் நிலையில் உள்ளது மற்றும் தற்போது பீட்டா சோதனையாளர்களுக்குக் கிடைக்கவில்லை. இது எப்போது அனைத்துப் பயனர்களுக்கும் வெளியிடப்படும் என்பதை நிறுவனம் அறிவிக்கவில்லை. மேலும், எதிர்காலத்தில் இது ஐபோன் (அதாவது, iOS) பயனர்களுக்குக் கிடைக்குமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
இதையும் படிங்கமியூசிக் பிரியர்களுக்கு Jio யின் பக்கவான திட்டம் அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை
மேலும், ஆண்ட்ராய்டு கஸ்டமர்களுக்காக ஷெட்யூல் மெசேஜ் அம்சத்தையும் வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது. இந்த அம்சம், பயனர்கள் செய்திகளை முன்கூட்டியே தயாரித்து, குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப அனுமதிக்கும். இருப்பினும், இந்த அம்சம் எப்போது கிடைக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ இன்னும் வெளியாகவில்லை.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
