சத்தமின்றி திடிரென்று BSNL யின் இந்த திட்டத்தை நிறுத்தியது.

HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) - போஸ்ட்பெய்ட் சேவைகளை வழங்கும்

ரூ.99-ஐ நிறுத்திவிட்டு ரூ.199-க்கு மாறிக்கொள்ளும்படி எச்சரிக்கை மெசேஜ்

இது செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது

சத்தமின்றி  திடிரென்று  BSNL  யின் இந்த திட்டத்தை நிறுத்தியது.

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) – போஸ்ட்பெய்ட் சேவைகளை வழங்கும் இந்தியாவின் நான்கு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றாகும்.அரசாங்கத்திற்கு சொந்தமான இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களைப் போலவே, அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களும் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குவதை விட ஒப்பீட்டளவில் .கொஞ்சம் விலை  குறைவு தான்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL தனது போஸ்ட்பெய்ட் பயனர்களை Plan99-இலிருந்து Plan199-க்கு இடம்பெயர செய்துள்ளது. இதுபற்றி வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ்-ஐயும் அனுப்பு உள்ளது மற்றும் இந்த மாற்றம் செப்டம்பர் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும் என்று பயனர்களை அலெர்ட் செய்துள்ளது.

பிஎஸ்என்எல் பயனர்கள் நிறுவனத்திடமிருந்து ஒரு எஸ்எம்எஸ் பெறுகிறார்கள், அதில் “அன்லிமிடெட் வாய்ஸ், 25 ஜிபி டேட்டா, டெய்லி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை Plan199 உடன் அனுபவிக்கவும். Plan99 நிறுத்தப்பட்டது மற்றும் 1 செப்டம்பர் 2021 அன்று நீங்கள் Plan199-க்கு இடம்பெயர்ந்தீர்கள்" என்கிற தகவல் உள்ளது. அதாவது இந்த மாற்றம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்று அர்த்தம்.

இனிமேல் பிளான் 99 பயனர்கள் ரூ.100 அதிக கட்டணம் செலுத்த வேண்டும்!

BSML நிறுவனம் அதன் பிளான் 99-ஐ நிறுத்தியதின் விளைவாக "இப்போதைக்கு" பயனர்கள் Plan199-க்கு மாற்றப்படுவார்கள். ஒருவேளை ஏற்கனவே பிளான் 99-இன் வேலிடிட்டி இன்னும் தீராத பயனர்களிடமிருந்து பிஎஸ்என்எல் நிறுவனம் கூடுதல் பணம் வசூலிப்பது சாத்தியமில்லை.

எப்படி பார்த்தாலும் இனிமேல் அவர்களால் Plan99-ஐ ரீசார்ஜ் செய்ய முடியாது, ஏனெனில் அது இப்போது கிடைக்கவில்லை. சரி இப்போது BSNL நிறுவனம் அதன் Plan199 வழியாக வழங்கும் நன்மைகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆனால் பிளான் 99-இன் செல்லுபடியாகும் காலம் காலாவதிக்குப் பிறகு, பயனர்கள் Plan199 உடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் இந்த டெலிகாம் ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் வேறு திட்டத்துடன் செல்ல வேண்டும்.

BSNL பிளான் 199-இன் நன்மைகள்:

BSNL வழங்கும் Plan199 ஆனது அதன் பயனர்களுக்கு இந்தியாவில் எந்த நெட்வொர்க்கிற்கும் எந்த தடையும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்பை இவழங்குகிறது. மேலும், பயனர்கள் மாதத்திற்கு 25 ஜிபி அளவிலான எஃப்யூபி டேட்டாவையும் உடன் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறுவார்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo