குறைந்த விலையில் அசத்தலான திட்டம் 180GB டேட்டா வரை வழங்கி அசத்தும் BSNL

HIGHLIGHTS

Bsnl புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

விரைவில் அனைத்து வட்டங்களுக்கும் வரலாம்

பிஎஸ்என்எல்லின் சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்று இந்த வட்டத்தில் தொடங்கப்பட்ட பிவி 102 பிளான் ஆகும்

குறைந்த விலையில் அசத்தலான திட்டம் 180GB டேட்டா வரை வழங்கி அசத்தும் BSNL

BSNL பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட், பல்வேறு வட்டங்களில் உள்ள அதன் சந்தாதாரர்களுக்கு பெருமளவில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த பட்டியலில் சமீபத்தில் இணைத்துள்ள வட்டம் – பஞ்சாப் சர்க்கிள் ஆகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த சில மாதங்களாக, கவர்ச்சிகரமான சலுகைகளுடன் பிராட்பேண்ட் துறையின் கீழ் நல்ல எண்ணிக்கையிலான புதிய சந்தாதாரர்களைச் சேர்க்கும் அதே வேளையில பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் துறையிலும் எந்த "பிரேக்கையும்" போடவில்லை (அதாவது ப்ரீபெய்ட் பிளான்களை கவனிக்காமல் விடவில்லை) என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது

அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் அதன் 4 ஜி நெட்வொர்க்கை எதிர்பார்க்கும் நேரத்தில், தொடர்ந்து கவர்ச்சிகரமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குவது பயனர்களை ஈர்க்கும் ஒரு நல்ல நடவடிக்கை என்றே கூறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.102 மற்றும் ரூ.143 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி:

பிஎஸ்என்எல்லின் சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்று இந்த வட்டத்தில் தொடங்கப்பட்ட பிவி 102 பிளான் ஆகும். இந்த திட்டம் எந்த டேட்டா நன்மையுடனும் வராது ஆனால் வாய்ஸ் கால் பயனர்களுக்கு, இந்த திட்டம் ஒரு சரியான நுழைவு நிலை விருப்பமாக உருவெடுக்கும். இது சந்தாதாரர்களுக்கு வெறும் ரூ.102 க்கு 30 நாட்கள் வரம்பற்ற வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது.

அதே வரிசையில் உள்ள மற்றொரு திட்டம் ரூ.143 ப்ரீபெய்ட் திட்டமாகும், இதை BSNL தளம் பிவி 143 என பட்டியலிட்டுள்ளது. இந்த திட்டம், மேலே பார்த்த திட்டத்தை போலல்லாமல், டேட்டா நன்மையையும் அனுப்புகிறது.

இதன் கீழ் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவார்கள். இதுவும் 30 நாட்கள் என்கிற செல்லுபடியுடன் வருகிறது. டேட்டா நன்மையுடன் சேர்த்து இந்த திட்டடத்தின் சந்தாதாரர்கள் அதே 30 நாள் செல்லுபடியாகும் காலத்திற்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் பெறுவார்கள்.

நினைவூட்டும் வண்ணம், இதனுடன் ஒப்பிடக்கூடிய ஒரு ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. அது ரூ.199 ஆகும். இது 28 நாட்கள் செல்லுபடியாகும் மேற்குறிப்பிட்ட அதே நன்மைகளுடன் வருகிறது.

பிஎஸ்என்எல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் வேலிடிட்டி:

பிவி 396 என பட்டியலிடப்பட்டுள்ள மற்றொரு ரூ.399 ப்ரீபெய்ட் திட்டமும் பஞ்சாப் வட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்-இன் இந்த ப்ரீபெய்ட் திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

மேலும் இது 90 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்கும்.

நினைவூட்டும் வண்ணம், பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ஏற்கனவே உள்ள ரூ.485 ப்ரீபெய்ட் திட்டமும் 90 நாட்கள் செல்லுபடியாகிறது மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

எவ்வாறாயினும், ரூ.485 திட்டத்திற்கும் ரூ.399 க்கும் உள்ள ஒரே வித்தியாசம் டேட்டா நன்மை மட்டும் அல்ல, ஏனெனில் விலை உயர்ந்த ரூ.485 ரீசார்ஜ் ஆனது EROS NOW சந்தாவுடன் வருகிறது.

எனவே ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் அறிமுகமானது, சந்தாதாரர்கள் விலை உயர்ந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக இந்த லேட்டஸ்ட் திட்டத்தின் பக்கம் திரும்ப நிறைய வாய்ப்புள்ளது.

பிஎஸ்என்எல் இன்ஆக்டிவ் (Inactive) வாடிக்கையாளர்களுக்கு!

மேற்குறிப்பிட்ட மூன்று புதிய திட்டங்களை தவிர்த்து, பிஎஸ்என்எல் ரூ.1,199 ப்ரீபெய்ட் திட்டத்தை அதன் ஜிபிஐஐ (GPII) வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதாவது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் செயலற்ற சந்தாதாரர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 365 நாட்கள் என்கிற முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் மொத்தம் 24 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo