சைபர் மோசடிகளுக்கு எதிராக பயனர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் ஏர்டெல் CEO
ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல், அந்நிறுவன பயானர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு இதுகுறித்து அவர் ஈமெயில் மூலம் கடிதம் அனுப்பி இருக்கிறார்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது
இந்தியாவில் ஆன்லைன் பரிமாற்றங்கள் வரலாறு காணாத அளவு அதிகரித்து வருவதால், சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல், அந்நிறுவன பயானர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
Surveyஏர்டெல் சந்தாதாரர்களுக்கு இதுகுறித்து அவர் ஈமெயில் மூலம் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் தற்போது இந்தியாவில் இரண்டு முக்கிய வழிகளில் ஆன்லைன் திருட்டு நடைபெறுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். முதலில் ஏமாற்றுவோர் ஏர்டெல் ஊழியர்கள் என கூறி பயனர்களுக்கு அழைப்பு மேற்கொள்கின்றனர். மற்றொரு புறம் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பேமன்ட் செய்யும் போது சைபர் குற்றங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக ஆன்லைன் பரிவரத்தனைகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதே போன்று சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது,' என விட்டல் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏர்டெல் ஊழியர்கள் என கூறிக்கொண்டு பயனர்களின் KYC விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என கூறி, டீம் வீவர் மூலம் குவிக் சப்போர்ட் எனும் செயலியை இன்ஸ்டால் செய்து பயனரின் சாதனத்தை இயக்கும் வசதியை திருடர்கள் பெற்று விடுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஏர்டெல் விஐபி எண்களை அழைப்புகளின் மூலம் விற்பனை செய்வதில்லை. மேலும் மூன்றாம் தரப்பு செயலிகளை இன்ஸ்டால் செய்ய ஏர்டெல் எப்போதும் வலியுறுத்தாது என விட்டல் தெரிவித்தார்.
இத்துடன் ஏர்டெல் ஊழியர் என கூறி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மூலம் மிகமுக்கிய விஐபி எண்களை குறைந்த விலையில் வழங்குவதாக பயனர்களிடம் தெரிவித்து, முன்பணம் செலுத்த கூறுகின்றனர்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile