வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் மேற்கொண்ட 5ஜி சோதனையில் 5.92 Gbps டவுன்லோட் வேகம் கிடைத்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இத்தகைய வேகம் வி நிறுவனம் நடத்திய சிங்கில் டெஸ்ட் டிவைஸ்-இல் கிடைத்து உள்ளது. வி நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் சொந்தமாக 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது.
Survey
✅ Thank you for completing the survey!
வணிக நெட்வொர்க்கில் 5ஜி சேவையை வெளியிடும் போது, வி நிறுவனம் லேடன்சி-சென்சிடிவ் மற்றும் வழக்கத்தை விட பெருமளவு இணைய சேவையை கோரும் தரவுகளான ஏ.ஆர்./வி.ஆர். மற்றும் 8K வீடியோ ஸ்டிரீமிங் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இது 5ஜி ஸ்டாண்ட்அலோன் NR-DC மென்பொருள் இருப்பதால் சாத்தியமாகும்.
எரிக்சன் மேசிவ் MIMO ரேடியோ, எரிக்சன் கிளவுட் நேட்டிவ் டூயல் மோட் 5ஜி கோர், மற்றும் NR-DC மென்பொருளில் மிட்-பேண்ட் மற்றும் ஹை-பேண்ட் 5ஜி டிரையல் ஸ்பெக்ட்ரத்தில் சோதனை நடத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன் வி நிறுவனம் 5ஜி சோதனையை குஜராத் பகுதியில் மேற்கொண்டது. இதற்காக வி நிறுவனம் நோக்கியாவுடன் இணைந்து இருந்தது.
இத்துடன் பயனர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு தலைசிறந்த பயன்பாடுகளை வழங்கும். முன்னதாக பூனேவில் வி தனது 5ஜி சோதனையை நடத்தி இருந்தது. அப்போது 4Gbps டவுன்லோட் வேகம் கிடைத்ததாக வி அறிவித்து இருந்தது. இந்த சோதனையின் போது அரசு அளித்து இருந்த ஸ்பெக்டரத்தையே வி பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile