Reliance Jio அறிமுகப்படுத்தியுள்ளது அசத்தலான திட்டம் வருட முழுவதும் கிடைக்கும் OTT நன்மை.

HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ கடந்த வாரம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 21 சதவீதம் வரை உயர்த்தியது.

ஜியோவின் இந்த திட்டங்கள் டிசம்பர் 1 முதல் விலை உயர்ந்தன

டிஸ்னி + ஹாட்ஸ்டார் அணுகலுடன் வரும் நிறுவனத்தின் திட்டங்களைப் பற்றி இன்று சொல்கிறோம்

Reliance Jio அறிமுகப்படுத்தியுள்ளது அசத்தலான திட்டம் வருட முழுவதும் கிடைக்கும் OTT நன்மை.

ரிலையன்ஸ் ஜியோ கடந்த வாரம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 21 சதவீதம் வரை உயர்த்தியது. ஜியோவின் இந்த திட்டங்கள் டிசம்பர் 1 முதல் விலை உயர்ந்தன. ஜியோ தனது திட்டத்துடன் வரும் இலவச OTT நன்மையையும் நீக்கியுள்ளது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் அணுகலுடன் வரும் நிறுவனத்தின் திட்டங்களைப் பற்றி இன்று சொல்கிறோம். இந்த திட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

RELIANCE JIO RS 601 PLAN

ஜியோவின் ரூ.601 ரீசார்ஜ் திட்டத்தில் (டிஸ்னி + ஹாட்ஸ்டார்), டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவச சந்தாவைப் வழங்குகிறது . முன்னதாக இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆக இருந்தது. இப்போது 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் கிடைக்கும். இந்த திட்டம் 1 வருட காலத்திற்கு Disney + Hotstar (Disney + Hotstar)க்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. திட்டத்தில் 6ஜிபி கூடுதல் டேட்டாவும் கிடைக்கும்.

RELIANCE JIO RS 659 PLAN

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் அன்லிமிட்டட் காலிங்கின் நன்மையை வழங்குகிறது. இது ஒரு கிரிக்கெட் பேக். முன்னதாக இந்த திட்டத்தின் விலை ரூ.549 ஆக இருந்தது, இப்போது ரூ.659 செலவழிக்க வேண்டும். திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவும் ஒரு வருடத்திற்கான திட்டத்தில் (டிஸ்னி + ஹாட்ஸ்டார்) வழங்கப்படுகிறது.

RELIANCE JIO 799 PLAN

ஜியோவின் இந்த ரீசார்ஜ் விலை 799 ரூபாய். முன்னதாக இந்த திட்டத்தை ரூ.666க்கு வாங்கலாம். இப்போது இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, பயனர்கள் அன்லிமிட்டட் காலிங் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவார்கள். ஜியோ ஆப்ஸின் இலவச சந்தா திட்டத்தில் கிடைக்கும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 56 நாட்கள்.ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo