Jio Vs Bsnl ரூ.249 Vs ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தில் எது பெஸ்ட் நீங்களே சொல்லுங்க
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்று நன்கு அறியப்படும்
ஜியோ vs பிஎஸ்என்எல் இந்த திட்டத்தில் எது பெஸ்ட்
Jio vs Bsnl ரூ.250க்குள் எது பெஸ்ட் பிளானை வழங்குகிறது?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்று நன்கு அறியப்படும் பிஎஸ்என்எல் மட்டுமே, தற்போது வரை ப்ரீபெய்ட் கட்டண உயர்வு பக்கம் செல்லாத ஒரே இந்தியாவில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ஆகும். தனியார் ஆபரேட்டர்களை விட குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குவதன் மூலம் புதிய பயனர்களை அதன் சந்தாதாரர் தளத்திற்கு ஈர்க்கும் வாய்ப்பு இருப்பதால், அரசு நடத்தும் இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் விலை உயர்வை பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது தான். நினைவூட்டும் வண்ணம், ரிலையன்ஸ் ஜியோ, டிசம்பர் 1, 2021 முதல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் கட்டண உயர்வை அமல்படுத்தியது.
Surveyஜியோ மற்றும் BSNL – இந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஏறக்குறைய ஒரே விலையில் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. அதில் பிஎஸ்என்எல் ரூ.247 திட்டமும், ஜியோவின் ரூ.249 திட்டமும் குறிப்பிடத்தக்கது. இதில் எது சிறந்தது? என்கிற குழப்பம் உங்களுக்கு இருப்பின், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்; ஏனெனில், அந்த 2 திட்டங்களை பற்றித்தான் விரிவாக இங்கே பேசவுள்ளோம்.
பிஎஸ்என்எல் ரூ 247 ப்ரீபெய்ட் திட்டம்:
BSNL நிறுவனம் அதன் பயனர்களுக்கு ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தை 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது, மொத்தம் 50GB அளவிலான டேட்டாவுடன் வரும் இந்த பேக் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 SMSகளையும் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனர்கள் ஒரே நேரத்தில் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அதாவது FUP லிமிட் எதுவும் கிடையாது. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை உட்கொண்டவுடன், இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மை ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சர்வீசஸ் ஆகும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ 249 ப்ரீபெய்ட் திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் (விலை உயர்விற்கு பிறகு) பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டம் இப்போது 23 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.இதன் கீழ் பயனர்கள் தினமும் 100 எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற குரல் அழைப்புடன் கூடுதலாக டெய்லி 2ஜிபி அளவிலான டேட்டாவைப் பெறுகிறார்கள்.
இந்த திட்டத்தின் வேலிடிட்டியாகும் BSNL இன் RS 247 திட்டத்தை விட மிகவும் குறைவாக இருந்தாலும், பயனர்கள் எப்படியும் 46GB டேட்டாவைப் பெறுகிறார்கள்.
ஆனால் மிக முக்கியமாக, ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் பெறுவது 4G டேட்டா ஆகும். பிஎஸ்என்எல் அதன் 4ஜி நெட்வொர்க்குகளான பான்-இந்தியாவை அறிமுகப்படுத்துவதில் இன்னும் செயல்பட்டு வருகிறது, மேலும் இது நடைமுறைக்கு வர இன்னும் சிறிது காலம் எடுக்கலாம்.தவிர ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது JioTV, JioSecurity, JioCloud மற்றும் JioCinema உள்ளிட்ட ஜியோ ஆப்களின் கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.4G பயனர்களுக்கு, ஜியோவின் ரூ.249 திட்டம் தான் சிறந்தது. ஆனால் நீங்கள் 3G அல்லது 2G உடன் செல்வதில் சிரமப்படவில்லை என்றால், BSNL வழங்கும் ரூ.247 திட்டம் தான் சிறந்தது.
குறிப்பு:- மேலும் பல ரீச்சார்ஜ் தகவல்களை பெற இங்கே செய்யுங்கள்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile