IPL 2022 சந்தோசமாக பார்க்க டிஸ்னி+ஹாட் ஸ்டார் சந்தாவுடன் Jio ப்ரீபெய்ட் பிளான்.
IPL போட்டிகளை பார்த்து ரசிப்பதற்கென்று தனி பிளான்களை வாங்க அவசியமின்றி, ஜியோ வழங்கும் இந்த பிளான்களானது
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கன்டென்டையும் யூஸர்கள் பார்க்கலாம்
ஜியோவின் கிரிக்கெட் பிளான்ஸ் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
IPL போட்டிகளை பார்த்து ரசிப்பதற்கென்று தனி பிளான்களை வாங்க அவசியமின்றி, ஜியோ வழங்கும் இந்த பிளான்களானது, யூஸர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் ஐபிஎல் போட்டிகளை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கின்றன. மேலும் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அனைத்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கன்டென்டையும் யூஸர்கள் பார்க்கலாம். யூஸர்களுக்கு பயனளிக்க கூடிய ஜியோவின் கிரிக்கெட் பிளான்ஸ் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Surveyஇதனிடையே நாட்டிலேயே முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியன் பிரீமியர் லீக் 2022 திருவிழாவை ஆர்வமுடன் பார்த்து ரசித்து வரும் யூஸர்களுக்காக பல ப்ரீபெய்ட் பிளான்களை வழங்கி வருகிறது. இந்த வாடிக்கையாளர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன்ஸ், காலிங் மற்றும் டேட்டா பலன்களுடன் வரும் பிளான்களை ஜியோ கொண்டுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனுடன் இணைந்த ஜியோவின் கிரிக்கெட் பிளான்கள்:
பேஸிக் கிரிக்கெட் பிளான் ரூ.499 என்ற விலையில் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த பிளானின் நன்மைகளுடன் நாளொன்றுக்கு 3GB டேட்டாவை வழங்குகிறது ரூ.601 என்ற விலையில் உள்ள பிளான்.
ரூ.799-க்கு வழங்கப்படும் ஜியோ பிளானில் ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ரூ.1066 பிளானில் யூஸர்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ரூ.2999 என்ற விலையில் வழங்கப்படும் வருடாந்திர பிளான் 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2.5GB டேட்டாவை வழங்குகிறது. மேலே நாம் பார்த்த பிளான்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும். அதே போல யூஸர்கள் ஏற்கனவே ஒரு நீண்ட கால மற்றும் கிரிக்கெட் பேக் அல்லாத பிளானை கொண்டிருந்தால், இப்போது Disney+ Hotstar நன்மைகளுக்கு மேம்படுத்தி கொள்ளும் வகையில் 2 டேட்டா திட்டங்களை டேட்டா ஆட்-ஆன் நன்மைகளுடன் (data add-on benefits) ஜியோ வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile