Airtel அதிவேக 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது.

HIGHLIGHTS

ஏர்டெல் நிறுவனம் அதிவேக 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தனது அதிவேக 5ஜி நெட்வொர்க் மற்றும் குறைந்த லேட்டன்ஸி திறனை காட்சிப்படுத்தியுள்ளது

ட்ரோன்கள் ஆகியவற்றில் 5ஜி செயல்படும் விதம் குறித்தும் காட்டப்பட்டது

Airtel  அதிவேக 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் அதிவேக 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஏர்டெல் நிறுவனம் தனது அதிவேக 5ஜி நெட்வொர்க் மற்றும் குறைந்த லேட்டன்ஸி திறனை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த லோ லேட்டன்ஸி திறன்மூலம் அதிக அளவிலான டேட்டாவை மிக குறைந்த நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

இத்துடன் ஐ.ஓ.டி என அழைக்கப்படும் இணைய சேவை தொடர்பான கிளவுட் கேமிங், அணிந்துகொள்ளக்கூடிய சாதனங்கள், ட்ரோன்கள் ஆகியவற்றில் 5ஜி செயல்படும் விதம் குறித்தும் காட்டப்பட்டது. 5ஜி உதவியுடன் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவின் உருவம் ஹோலோகிராமில் உருவாக்கப்பட்டது. 1983 உலகக்கோப்பையின்போது கபில் தேவ் 175 ரன்கள் அடித்த காட்சி 5ஜி ஹோலோகிராம் மூலம் மறு உருவாக்கம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

5ஜி சேவைமூலம் துல்லியமான ஹோலோகிராம்களை உருவாக்கி எந்த இடத்திற்கு வேண்டுமனாலும் அனுப்ப முடியும், இணைய சந்திப்பு, இணைய நிகழ்ச்சி, நேரலை செய்திகள் ஆகியவற்றில் இந்த ஹோலோகிராம் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
 
ஏர்டெல்லின் 5ஜி சேவையின் மூலம் 1 ஜிபிபிஎஸ் வேகத்திற்கு மேல், 20ms லேட்டன்ஸிக்கும் குறைவாக கிடைக்கும் 4கே வீடியோக்களை 50 பயனர்கள் தடை இல்லாமல் ஸ்மார்ட்போனில் கண்டுகளித்தனர்.  மல்டிபிள் கேமரா ஆங்கிள், 360 டிகிரி இன் ஸ்டேடியம் காட்சி, ஷாட் அனாலிசிஸ் ஆகியவையும் 5ஜி மூலம் காட்டப்பட்டது.

இன்னும் 2  மாதத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இந்த வருட சுதந்திர தினத்தின்போது 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo