ஆடியோ சாதனங்கள் மற்றும் வாட்ச் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் நாய்ஸ், தற்போது தனது புது மாடல் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. கலர்ஃபிட் பல்ஸ் Buzz எனப்படும் அந்த புது ஸ்மார்ட்வாட்ச் ஆனது புளுடூத் காலிங் உள்பட பல்வேறு அம்சங்களுடன் வருகிறது.
Survey
✅ Thank you for completing the survey!
இதுதவிர ஸ்லீப் மானிட்டரிங், வானிலை நிலவரம் உள்பட எண்ணற்ற அம்சங்களை கொண்டுள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 நாட்கள் பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. கிரீன், பிளாக், கிரே, பிங்க், புளூ உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ.3,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அறிமுக ஆஃபரில் ரூ.2,499க்கு கிடைக்கிறது.
1.69 இன்ச் TFT LCD டச் ஸ்க்ரீன் உடன் கூடிய இந்த ஸ்மார்ட் வாட்ச் ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங், ஃபிட்னஸ் உள்ளிட்டவற்றை டிராக் செய்ய 60க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை கொண்டுள்ளது. இதயத் துடிப்பு சீராக உள்ளதா என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வசதியும் இதில் உள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile