மாப்பு வச்சிட்டாய ஆப்பு Airtel இந்த இரண்டு 30 நாட்கள் வேலிடிட்டி பிளான் இனி கிடைக்காது ஷாக்கில் மக்கள்
Airtel அதன் இரண்டு ப்ரீபெய்ட் டேட்டா பேக் திட்டத்தை நிறுத்தியுள்ளது
இந்த திட்டமானது முழுசா 1 மாதம் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும்
இந்த திட்டத்தின் விலை ரூ,121 மற்றும் ரூ,181 திட்டமாகும்
இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிருவபமான Airtel அதன் ப்ரீபெய்ட் டேட்டா பேக் திட்டத்தை நிறுத்தியுள்ளது அதில் இந்த திட்டமானது முழுசா 1 மாதம் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும் அதாவது 30 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கியது, இந்த திட்டத்தின் விலை ரூ,121 மற்றும் ரூ,181 திட்டமாகும் மேலும் இதில் அதிகபட்ச OTT நன்மையும் கிடைத்து வந்தது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பத்தி முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyAirtel ரூ.121 டேட்டா பேக்
ஏர்டெல்லின் ரூ.121 டேட்டா பேக் முன்பு மொத்தம் 8 ஜிபி (ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழியாக ரீசார்ஜ் செய்தால் 6 ஜிபி அடிப்படை + கூடுதல் 2 ஜிபி) 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கியது.
இதையும் படிங்க:நேருக்கு நேர் போட்டி Jio மற்றும் Airtel 1 வருட வேலிடிட்டி திட்டத்தில் எது கெத்து ஒரு முறை ரீசார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி
Airtel ரூ.181 திட்டம்.
ஏர்டெல்லின் ரூ.181 OTT டேட்டா பேக் முன்பு 30 நாட்கள் செல்லுபடியாகும் 15 ஜிபி டேட்டாவை வழங்கியது. 30 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சந்தா பேக்குடன் சேர்க்கப்பட்டுள்ளது.
Airtel Thanks ஆப் யில் ரீசார்ஜ் செய்தால் கிடைக்கும் நன்மைகள்
ரூ.121 டேட்டா பேக் நீக்கப்பட்டதால், ஆப்-எக்ஸ்க்ளூசிவ் சலுகைகளை வழங்கும் பேக்குகள்/திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்தால், குறிப்பிட்ட பேக்குகளுக்கு கூடுதல் டேட்டாவை வெகுமதியாக ஏர்டெல் வழங்குகிறது.
இப்போது, நாம் கவனித்தால், இந்த நன்மை மெதுவாக படிப்படியாகக் குறைக்கப்படுகிறது, ஏனெனில் ஒரே ஒரு பேக் (ரூ.77 டேட்டா பேக்) மட்டுமே தற்போது அத்தகைய நன்மையை வழங்குகிறது. கஸ்டமர்கள் ஏற்கனவே டிஜிட்டல் தளங்கள் வழியாக ரீசார்ஜ் செய்யப் பழகிவிட்டதால் இது டெலிகாம் நிறுவனத்தின் சிறிய முன்னேற்றம் தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile