எங்கிட்ட மோததே நா ராஜாதி ராஜனடா VI யின் வாயடைத்த Jio, ஒரே மாதிரியான விலை கொண்ட திட்டத்தில் இவ்வளவு வித்தியாசமா
Reliance Jio மற்றும் Vodafone Idea (Vi) இரண்டும் தனியார் டெலிகாம் நிருவனகளில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இதில் அம்பானியின் Jio நிறுவனம் கம்மி விலையில் அதிக நன்மை வழங்கும் திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது இப்பொழுது Jio உடன் போட்டி போடும் விதமாக வோடபோன் ஐடியாவும் அதே ரூ,189 யில் வரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த இரு திட்டத்தை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ,189 திட்டத்தின் நன்மை.
ஜியோவின் இந்த திட்டமானது ரூ,189 யில் வருகிறது இதன் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் காலிங் இதனுடன் இதில் மொத்தம் 2GB டேட்டா மற்றும் 300 SMS நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் இதன் டேட்டா லிமிட் முடிந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் கூடுதல் add-on நன்மையாக JioTV மற்றும் JioAICloud நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது.
இதையும் படிங்க:நேருக்கு நேர் போட்டி Jio மற்றும் Airtel 1 வருட வேலிடிட்டி திட்டத்தில் எது கெத்து ஒரு முறை ரீசார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி

Vodafone Idea (vi) ரூ,189 திட்டத்தின் நன்மை.
வோடபோன் ஐடியாவின் ரூ,189 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மற்றும் மொத்தமாகவே வெறும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் 300 SMS நன்மையுடன் இதன் வேலிடிட்டி வெறும் 26 நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் கூடுதலாக எந்த வித add-on நன்மையும் கிடையாது
jio VS VI இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்
ஜியோவுடன் போட்டி போட்ட வோடபோன்ஐடியாவின் ரூ, 189 திட்டத்தில் வரும் வித்தியாசம் என பார்க்கையில் VI விட கூடுதலாக 2 நாட்கள் வேலிடிட்டி அதிகம் தரும் jio மற்றும் இதை தவிர டேட்டா நன்மையிலும் VI ஓரக்கட்டி 2GB டேட்டா வழங்குகிறது இதை தவிர jio கூடுதல் நன்மையாக JioTV மற்றும் JioAICloud வழங்குகிறது ஆனால் வோடபோன் ஐடியாவில் அப்படி ஏதும் இல்லை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile