டாடா ஸ்கையில் இருந்து தற்போது டாடா பிளே என பெயர் மாற்றப்பட்டு இருக்கும் டி.டி.ஹெச். சேவை வழங்கும் நிறுவனம் புதிதாக பின்ஜ் ஸ்டார்டர் பேக் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. இது குறைந்த விலையில் OTT பலன்களை வழங்கும் சலுகை ஆகும்.
மிகவும் குறைந்த விலை சலுகை என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இதன் விலை ரூ. 49 ஆகும். இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். டாடா பிளே பின்ஜ் ஸ்டார்டர் பேக் தவிர ரூ. 149 மற்றும் ரூ. 299 விலைகளில் பேசிக் மற்றும் பிரீமியம் சலுகைகளை டாடா பிளே வழங்கி வருகிறது.
Survey
✅ Thank you for completing the survey!
டாடா பிளே பின்ஜ் ஸ்டார்டர் பேக் இரோஸ் நௌ, ஷீமாரோமி, ஜீ5 மற்றும் ஹங்காமா என நான்கு OTT தளங்களுக்கான சந்தாவை வழங்குகிறது. இதனை ஆக்டிவேட் செய்ததும், பயனர்கள் OTT டேட்டாக்களை தங்களின் சாதனங்களில் உள்ள செயலியில் பார்த்து ரசிக்க முடியும்.
டாடா பிளே பின்ஜ் ஸ்டார்டர் பேக் சலுகையில் பயனர்கள் தரவுகளை தொலைகாட்சி மற்றும் இணையதளத்தில் ஸ்டிரீம் செய்ய முடியாது. குறிப்பிட்ட OTT தளங்களின் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க பயனர்கள் டாடா பிளே பின்ஜ் செயலியை சம்பந்தப்பட்ட சாதனங்களில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். முன்னதாக டாடா பிளே பின்ஜ் சலுகை டிரீம் டிடிஹெச் என அழைக்கப்பட்டு வந்தது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile