ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ஜியோ புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
ஒன்பிளஸ் 10 ப்ரோவை வாங்கும் போது ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.7200 மதிப்புள்ள நன்மைகளை வழங்குகிறது. , மார்ச் 31, 2022 அன்று ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ அதன் இணையதளத்தில் சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விரிவாக வகுத்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.7200 கேஷ்பேக் ஒரு வவுச்சராகவோ அல்லது மொத்த தொகையாகவோ இருக்காது என்பதை நினைவில் கொள்ளவும். சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விரிவாக அறிய, மேலே படிக்கவும்.
இதன்படி ஜியோ வாடிக்கையாளார்கள் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கினால்ரூ.7200 அளவிலான கேஷ்பேக் வழங்கப்படும். ஆனால் இந்த கேஷ்பேக் மொத்தமாக வழங்கப்படாது. ரூ.150 தள்ளுபடி கூப்பனாக 48 கூப்பன்கள் மை ஜியோ செயலி மூலம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த சலுகை ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்திய வேரியண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் ஜியோ கூறியுள்ளது. மேலும் ஜியோ வாடிக்கியாளர்கள் ரூ.1199 திட்டத்தையும் பயன்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தினம் 3ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், ஜியோ செயலி சந்தா ஆகியவை 84 நாட்களுக்கு வழங்கப்படும்.
இந்த கூப்பன்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை கிடையாது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile