பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.329-க்கு ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இப்போது பாரத் ஃபைபர் சேவைகளின் கீழ் ரூ.329 ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை வழங்குகிறது. முன்னதாக, ரூ.449 திட்டம் BSNL வழங்கும் மிகவும் குறைந்த விலையில் ஃபைபர் பிராட்பேண்ட் விருப்பமாக இருந்தது. ஆனால் இப்போது, ரூ.329 திட்டம் மிகவும் குறைந்த விலையில் ஏதாவது ஒன்றைப் பெற விரும்பும் பயனர்களுக்குச் செல்லக்கூடிய விருப்பமாக மாறும். 329 திட்டம் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் வசிக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. இது உங்கள் மாநிலத்தில் கிடைக்கிறதா என்பதைச் சரிபார்க்க, BSNL Bharat Fiber இன் இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.
Survey
✅ Thank you for completing the survey!
இந்த திட்டத்தில் ரூ.329-க்கு வாடிக்கையாளர்கள் 1000 ஜிபி டேட்டாவை, 20 Mbps வேகத்தில் பெறுவர். அத்துடன் ஃபிக்சட் லைன் வாய்ஸ் அழைப்பு இலவசமாக வழங்கப்படும். இதுமட்டும் இல்லாமல் முதல் மாத கட்டண தொகையில் 90 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதற்கு முன் குறைந்த விலை ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமாக பி.எஸ்.என்.எல்லின் ரூ.449 திட்டம் இருந்தது. இந்த திட்டத்தில் 30Mbps வேகத்தில் 3.3 டிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த புதிய திட்டம் தனி நபர் ஒருவர் இணையம் பயன்படுத்த போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் நாட்டின் சில மாநிலங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் இணையதளத்திற்கு சென்று இந்த திட்டம் தங்கள் இடங்களுக்கு அமலில் உள்ளதா என அறிந்துகொள்ளலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile