100, ரூபாய்க்குள் அசத்தலான நன்மை Jio vs Airtel vs Vodafone Idea எது உண்மையில் பெஸ்ட்?

HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது

ஒவ்வொரு நிறுவனத்தின் அடிப்படைத் திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்

ஜியோ ரூ.79 திட்டத்தின் விலையை ரூ.91 ஆக உயர்த்தியுள்ளது

100, ரூபாய்க்குள் அசத்தலான நன்மை Jio vs Airtel vs Vodafone Idea  எது உண்மையில் பெஸ்ட்?

நாட்டின் முன்னணி நெட்வொர்க் வழங்குநரான ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. மற்ற நெட்வொர்க் வழங்குனர் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் கட்டண உயர்வுக்கு பிறகு நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. சிறந்த நெட்வொர்க் தரம் மற்றும் வர்த்தகத்தை கருத்தில் கொண்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக டெலிகாம் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. விலை உயர்வுக்குப் பிறகும் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை விட ஜியோ குறைவானது ஜியோவின் அடிப்படைத் திட்டம் ரூ. 91 இல் தொடங்கும் போது, ​​வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் திட்டங்கள் ரூ.99 இல் தொடங்குகின்றன, மேலும் எஸ்எம்எஸ் பலன்களைக் கூட வழங்குவதில்லை. ஜியோ ரூ.79 திட்டத்தின் விலையை ரூ.91 ஆக உயர்த்தியுள்ளது, இது டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது 
.
ஜியோவின் ரூ.91 திட்டம்: ஜியோவின் ரூ.91 திட்டத்தில் மொத்தம் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வொய்ஸ்  காலின்கிற்க்கான அன்லிமிட்டட் வொய்ஸ்  காலிங் கிடைக்கிறது. இது தவிர, இந்த திட்டத்தில் 50 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டம் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ செக்யூரிட்டி  பயன்பாடுகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஏர்டெல்லின் ரூ.99 திட்டம்: ஏர்டெல்லின் ரூ.99 திட்டத்தில் மொத்தம் 200 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. கால்களுக்கு , ரூ.99 டாக் டைம் இதில் கிடைக்கிறது. குரல் அழைப்புக்கு, இந்த திட்டத்தில் வினாடிக்கு 1 பைசா வசூலிக்கப்படுகிறது. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

வோடபோன் ஐடியாவின் ரூ.99 திட்டம்: ரூ.99 டாக் டைம் வோடபோன் ஐடியாவின் ரூ.99 திட்டத்தில் கிடைக்கிறது. டேட்டாவைப் பற்றி பேசினால், இந்த திட்டத்தில் மொத்தம் 200 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. அழைப்பிற்கு, இந்த திட்டத்தில் ஒரு வினாடி அழைப்புக்கு 1 பைசா வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வேலிடிட்டி அடிப்படையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo