Jio Vs Airtel Vs vi 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் எது பெஸ்ட் ?

HIGHLIGHTS

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கடந்த வாரம் தங்கள் ப்ரீ-பெய்டு திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியது.

ரிலையன்ஸ் ஜியோ இப்போது அதன் ப்ரீ-பெய்டு திட்டங்களின் விலைகளை 20 சதவீதம் அதிகரித்துள்ளது,

ஜியோவின் புதிய திட்டங்கள் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும்.

Jio Vs Airtel Vs vi 84 நாட்கள் வேலிடிட்டி  கொண்ட  இந்த திட்டத்தில்  எது பெஸ்ட் ?

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கடந்த வாரம் தங்கள் ப்ரீ-பெய்டு திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியது. அதன் பிறகு, ஜியோவின் திட்டத்தின் விலை அதிகரிக்கக் காத்திருந்தது, அது இப்போது முடிந்துவிட்டது. ரிலையன்ஸ் ஜியோ இப்போது அதன் ப்ரீ-பெய்டு திட்டங்களின் விலைகளை 20 சதவீதம் அதிகரித்துள்ளது, ஜியோவின் குறைவான திட்டம் இப்போது ரூ 91 ஆக மாறியுள்ளது, இது முன்பு ரூ.75 ஆக இருந்தது. ஜியோவின் ரூ.91 திட்டத்தில், வாடிக்கையாளர்கள் மொத்தம் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் காலிங் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் 50 எஸ்எம்எஸ் வசதியைப் பெறுவார்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஜியோ Vs ஏர்டெல் Vs vi: 84 நாட்கள் திட்டம்

ஜியோவின் 84 நாள் திட்டமான ரூ.329 இப்போது ரூ.395 ஆகிவிட்டது. இதில், மொத்தம் 6 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் காலிங் மற்றும் 1000 மெசேஜ்கள் கிடைக்கும்.

ரூ.555 திட்டம் இப்போது ரூ.666 ஆகிவிட்டது. இதில், 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் காலிங் மற்றும் 100 மெசேஜ்கள் கிடைக்கும்.

ஜியோவின் 84 நாள் திட்டமான ரூ.599 இப்போது ரூ.719 ஆகிவிட்டது. இதில், தினமும் 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டட் காலிங் மற்றும் 100 மெசேஜ்கள் கிடைக்கும்.

ஏர்டெல் திட்டங்கள்

84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்நிறுவனத்தின் ரூ.379 திட்டம் தற்போது ரூ.455 ஆக மாறியுள்ளது. இதில் மொத்தம் 6 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் காலிங் வசதி உள்ளது.

ரூ.598 திட்டம் இப்போது ரூ.719 ஆகிவிட்டது. இதில், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 மெசேஜ்கள் கிடைக்கும்.

ரூ.698 திட்டம் இப்போது ரூ.839 ஆகிவிட்டது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்பு மற்றும் 100 மெசேஜ்கள் வழங்கப்படும்.

வோடபோன் ஐடியா திட்டங்கள்

84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்நிறுவனத்தின் ரூ.379 திட்டம் தற்போது ரூ.459 ஆக மாறியுள்ளது. இதில் மொத்தம் 6 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட்  காலிங்  வசதி உள்ளது.

வோடஃபோனின் ரூ.599 ப்ரீ-பெய்டு திட்டம் இப்போது ரூ.719. 84 நாட்கள் வேலிடிட்டியுடன், தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட்  காலிங் வசதி உள்ளது.

வோடபோன் ஐடியாவின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது ரூ.839. 84 நாட்கள் வேலிடிட்டியுடன், தினசரி 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட்  காலிங் வசதி உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo