தொலைக்காட்சித் தொடர் அதன் சிறந்த படத் தரத்திற்கு பெயர் பெற்றது. இப்போது சோனி தனது இரண்டு புதிய OLED டிவி BRAVIA XR 77A80J 77 இன்ச் மற்றும் 85X85J 85 இன்ச் 4K மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிவிகள் டால்பி விஷன், டால்பி அட்மோஸ், ஐமாக்ஸ் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகின்றன. பெயர் குறிப்பிடுவது போல, இந்த டிவிகளில் 77 இன்ச் மற்றும் 85 இன்ச் பெரிய ஸ்க்ரீன்கள் உள்ளன.
Survey
✅ Thank you for completing the survey!
மேலும் இவை காக்னிடிவ் பிராசஸர் XR மற்றும் X1 4K HDR பிக்ச்சர் பிராசஸர், 4K, HDMI 2.1, ALLM மற்றும் VRR வசதி கொண்டுள்ளன. இத்துடன் டால்பி அட்மோஸ், டால்பி விஷன், அகவுஸ்டிக் ஆட்டோ-கேலிப்ரேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சோனியின் புதிய OLED டிவி மாடல்களில் XR TRILUMINOS மற்றும் TRILUMINOS Pro வசதி உள்ளன. ஆடியோவை பொருத்தவரை 77A80J மாடலில் 3டி சரவுண்ட் சவுண்ட், 85X85J மாடலில் X பேலன்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் கூகுள் டிவி, ஆப்பிள் ஏர்பிளே 2 மற்றும் ஹோம்கிட் உள்ளிட்டவைகளுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சோனி பிரேவியா XR77A80J மாடல் விலை ரூ. 5,49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 25 ஆம் தேதி துவங்குகிறது. பிரேவியா 85X85J மாடல் விலை ரூ. 4,99,990 ஆகும். இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile