OnePlus Watch இந்தியாவில் அறிமுகமானது விலை என்ன வாங்க பாக்கலாம்.

HIGHLIGHTS

OnePlus யின் Smart Wearable பிரிவவில் OnePlus Bandக்கு இப்பொழுது முதல் Smartwatch OnePlus Watch அறிமுகமாகியுள்ளது

ஒன்பிளஸ் வாட்ச் இந்தியாவில் ரூ .16,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வருகிறது.

OnePlus Watch  இந்தியாவில் அறிமுகமானது விலை என்ன வாங்க பாக்கலாம்.

OnePlus யின் Smart Wearable பிரிவவில் OnePlus Bandக்கு இப்பொழுது முதல் Smartwatch OnePlus Watch அறிமுகமாகியுள்ளது  இது பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் வாட்ச் இந்தியாவில் ரூ .16,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு பதிப்பு வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை அறிவிக்கப்படவில்லை.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus Watch யின்விலை மற்றும் விற்பனை தகவல்.

ஒன்பிளஸ் வாட்ச் மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் மூன்லைட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த வாட்ச் ரூ. 14,999 விலையில் அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வருகிறது.

OnePlus Watch யின் சிறப்பம்சம் 

 ஒன்பிளஸ் யின் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் ஹெச்டி 454×454 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 2.5டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இது ஒன்பிளஸ் டிவியுடன் இணைந்து ரிமோட் போன்றும் இயங்குகிறது. இதை கொண்டு டிவி ஒலியை குறைத்தல் மற்றும் டிவியை ஆப் செய்யவும் முடியும். 5ATM+IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 110-க்கும் அதிக உடற்பயிற்சிகளை தானாக கண்டறிந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. 

புதிய ஸ்மார்ட்வாட்ச் 46 எம்எம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் கொண்டுள்ளது. மேலும் நோட்டிபிகேஷன், அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது, மியூசிக், புகைப்படங்களை எடுப்பது போன்ற அம்சங்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 4 ஜிபி மெமரி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரும்பாலான ப்ளூடூத் இயர்பட்களுடன் இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் 402 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இரண்டு வாரங்களுக்கு தேவையான பேக்கப் வழங்குகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருப்பதால், ஐந்தே நிமிடங்களில் ஒரு நாளுக்கு தேவையான திறனையும், 20 நிமிடங்களில் ஒரு வாரத்திற்கு தேவையான பேக்கப் வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo